சிம்பு – தனுஷ் விரிசல்… மகளின் ஆசையை நிறைவேற்றிய ரஜினி…. ஐஸ்வர்யா வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா திருமணத்திற்கு சம்மதிக்கவே இல்லை. ராமாயணம் மகாபாரதம் உட்பட இன்னும் பல இதிகாசங்களை பார்த்தால் அவை அனைத்துமே பெண்ணுக்காக நடந்த யுத்தங்களாக தான் இருக்கும். அதுபோல் நடிகர்கள் தனுஷூக்கும் சிம்புவுக்கும் இடையே ஒரு பெண்ணால் பிரச்சனை ஏற்பட்டது. அவர்கள் இருவருமே ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக தான் இருந்தனர்.

தனுஷ் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன். சிம்புவும் இயக்குனர் டி ராஜேந்தர் மகன். இருவருமே ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள்தான். இருவருமே சினிமாவில் ஒரே நேரத்தில் தான் எண்ட்ரி கொடுத்தார்கள். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சிம்புவும் பள்ளிக்காலம் முதலே நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த நட்பு காலம் செல்ல செல்ல இருவருக்கும் இடையே காதலாக வளர்ந்திருக்கிறது. அது அவர்களின் நட்பு வட்டாரத்திற்கும் நன்றாகவே தெரியும்.

அப்படி அவர்கள் காதலர்களாக இருந்த நேரத்தில்தான், நடிகர் தனுஷ் நடித்த திருடா திருடி திரைப்படம் வெளியானது. அந்த படம் தான் தனுஷூக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த படமாகவும் இருந்தது. அந்த படத்தில் வரும் மன்மத ராசா மன்மத ராசா பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆனது. அந்த பாடல்தான் சிம்புவுக்கும் தனுஷூக்கும் இடையே விரிசலையும் ஏற்படுத்தியது.

திருடா திருடி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் சிம்பு, ஐஸ்வர்யாவுடன் தான் வந்திருந்தார். அந்த சந்திப்பின்போது தனுஷூக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அதுவரை சிம்புவின் தோழியாக காதலியாக இருந்த ஐஸ்வர்யாவின் போக்கு அதன் பிறகு மாறியது. நடிகர் தனுஷ் மீது ஏற்பட்ட ஒருவிதமான ஈர்ப்பால் அவரை பின்தொடர ஆரம்பித்து விட்டார். இந்த விஷயம் நடிகர் சிம்புவுக்கு தெரிய வர அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது.

இதுகுறித்து சிம்பு பேசிய ஆடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி பேசுபொருளாகவும் மாறியது. அதன் பின்பு இந்த விவகாரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கவனத்துக்கு வந்தது. உடனே தனது மகளை அழைத்து அவர் கண்டித்தார். இது நமக்கு சரிபட்டு வராது என்றும் பலமுறை ஐஸ்வர்யாவை எச்சரித்திருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா விடாப்பிடியாக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் தற்கொலை முயற்சி வரை போனதால் வேறு வழியே இல்லாமல்தான் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் – ஐஸ்வர்யா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

ரஜினியின் விருப்பமே இல்லாமல் தான் ஐஸ்வர்யா – தனுஷ் ஆகியோரின் திருமணம் அப்போது நடந்தது. அதன்பிறகு ரஜினியின் மருமகன் என்பதால் மிகப்பெரிய உச்சத்தை நடிகர் தனுஷ் அடைந்தார். ஆனால் திருமணம் ஆகி இரண்டு மகன்கள் பிறந்த பிறகு 18 ஆண்டுகள் கழித்து தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விரிந்து வாழ்கின்றனர்.

நடிகர்கள் சிம்பு, தனுஷ் நட்பில் புயலாக ஒரு காலகட்டத்தில் வந்து அவர்களது நட்பை பிரித்தவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தான் என்பது அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள், இத்தனை நாளாக இது நமக்கு தெரியலையே என்று புலம்புகின்றனர்.