அமித்ஷா கொடுத்த warning …அண்ணாமலை தான் எல்லாம்… இப்ப தெரிகிறதா அண்ணாமலை பவர்…

0
Follow on Google News

பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, அவருடைய மாநில பதவி காலம் முடித்ததை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் மாற்றம் நடந்தது. அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றியது. அண்ணாமலை அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது, அண்ணாமலையை டெல்லி பாஜக ஓரம் கட்டி விட்டது. அண்ணாமலை மீது கடும் கோபத்தில் அமித்ஷா உள்ளார், அண்ணாமலை செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியில் பிரதமர் மோடி உள்ளார் என்றெல்லாம் இஷ்டத்துக்கு ஒரு கும்பல் அண்ணாமலை எதிராக செய்திகளை பரப்பி சுய இன்பம் அடைந்து கொண்டது.

மேலும் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை மாற்றம் செய்யப்பட்ட பின்பு, பெருமபாலான பாஜக கட்சி நிகழ்வுகளில் அண்ணாமலை கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்தார். குறிப்பிட்ட முக்கியமான நிகழ்வாக, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் மட்டுமே அண்ணாமலையை பார்க்க முடித்ததது. இதனை தொடர்ந்து அண்ணாமலை தனி கட்சி தொடங்க இருக்கிறார் என்றெல்லாம் ஒரு கும்பம் அண்ணாமலை மீது பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் முயற்சியாக தவறான செய்தியை பரப்பி விட்டது.

இந்நிலையில் அண்ணாமலை குறித்து பரப்பப்பட்டு அணைத்து பொய்யான செய்திகளுக்கும் மூன்று புள்ளி வைக்கும் விதத்தில், குறிப்பாக அண்ணாமலை அரசியல் அவ்வளவு தான் என சுய இன்பம் அடைந்த சிலருக்கு வார்னிங் கொடுக்கும் வகையிலும் அமைந்து இருக்கிறது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாடுகள்.

சமீபத்தில் நெல்லை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்சா பயணம் செய்த காரில் ஒன்றாக அமர்ந்து ஒரே காரில் பயணம் செய்தார் அண்ணாமலை, அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல விசயங்களை அண்ணாமலை உடன் ஆலோசித்து இருக்கிறார் அமித்ஷா. மேலும் மேடையிலே அண்ணாமலை உடன் அமித்ஷா மிக சீரியசாக டிஸ்கஸ் செய்த நிகழ்வு அரங்கேறியது.

குறிப்பாக டெல்லி தலைமை தொடர்ந்து அண்ணாமலைக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வருவதின் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. 3 சதவிகித வாக்கு வங்கியுடன் நோட்டா கட்சி என்ற கேலி கிண்டல் பேச்சுக்கு உள்ளாகி இருந்த தமிழக பாஜகவை 11 சதவிகித வாக்கு வங்கியாக உயர்த்தி காட்டியவர் அண்ணாமலை என்பது, டெல்லி பாஜக தலைமைக்கு நன்கு தெரியும், குறிப்பாக கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் பாஜகவை இரண்டாம் இடம் பிடிக்க வைத்தவர் அண்ணாமலை என்பது பிரதமர் மோடி மற்றும் அமித்சா ஆகிய இருவரும் நன்கு அறிந்தவர்கள்.

குறிப்பாக அண்ணாமலை யார் என்பதை கட்சி தொண்டர்களும், தமிழகம் மக்களும் தெரிவதற்கு முன்பே, IPS அண்ணாமலையாக நன்கு தெரிந்து கொண்ட அமித்ஷா, பிரதமர் மோடி, பி எல் சந்தோஷ் ஆகியோரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு மாநில தலைவராக அமர வைக்கப்பட்டவர் அண்ணாமலை. அந்த வகையில் தமிழக பாஜகவின் முகம் அண்ணாமலை தான் என்பதை பலருக்கு உணர்த்தும் விதமாக தான்,

சமீபத்தில் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமித்ஷா தனக்கு அருகில் அண்ணாமலையை அமரவைத்தவர், ஒரே காரில் தன்னுடன் அண்ணாமலையை அழைத்து சென்ற அமித்ஷா, பல இடங்களில் அண்ணாமலை விலகி தள்ளி நின்றாலும் கூட, எங்கே அண்ணாமலை என அருகில் அழைத்து நிற்க வைத்து, அண்ணாமலை தான் தமிழக பாஜக , அவருக்கு டெல்லி தலைமை எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை உணர்த்தி விட்டு சென்று இருக்கிறார் அமித்ஷா என்கிறது டெல்லி வட்டாரங்கள்.