உதயநிதிக்கு சிறை உறுதி… தேர்தலில் போட்டியிட முடியாது… அமித்ஷா வெச்ச ஆப்பு…

0
Follow on Google News

கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருந்து வரும் நிலையில், மக்களின் மீது அதிருப்தியை போக்கி எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வந்து விட வேண்டும் ஏன் திமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அதன் ஒரு வெளிப்பாடாக தான், வரும் ஜனவரி மாதம் பொங்கல் அன்பளிப்பாக தலா ஒரு ரேஷன் கார்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 2 கோடி ரேஷன் கார்டு தமிழகத்தில் மட்டும் இருக்கும் நிலையில், இதற்காக சுமார் 10 ஆயிரம் கோடி ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 5 ஆயிரம் கொடுத்து, திமுக ஆட்சியின் மீது உள்ள கோபத்தை போக்கி விடலாம் என்கிற திமுகவின் திட்டம் கை கொடுக்குமா என்பதை தேர்தல் முடிவுகள் தான் முடிவு செய்யும்.

இந்நிலையில் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அதாவது அவர் சினிமா படத்தயாரிப்பு தொடங்கும் முன்பே, தற்பொழுது அவர் தந்தை இருக்கும் சித்தரஞ்சன் சாலையில் இருக்கும் வீடு வாங்க கடனாக கடந்த 2007ம் ஆண்டு கொடுத்ததாக 2021 தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் தெரிவித்து இருந்தார் உதயநிதி , இந்த பணம் உதயநிதிக்கு எப்படி வந்தது என அப்போதே சர்ச்சை வெடித்தது.

மேலும் தற்பொழுது டாஸ்மாக் ஊழல் விவகாரத்திலும் உதயநிதியை சுற்றி அமலாக்க துறை வளைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும், டாஸ்மாக் உயர் அதிகாரி விசாகன் கொடுத்து வாக்குமூலம், உதயநிதியின் நெருங்கிய நண்பர்கள் சுற்றி வளைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்று, தற்காலிகமாக தப்பித்து இருக்கிறார்கள், ஆனால் இது எந்த நேரமும் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி இந்து மதம் குறித்து சைவம், வைணவம் என சர்ச்சைக்குரிய வைகையில் பேசிய வழக்கு நிலுவையில் உள்ளது, ஆனால் இதுவரை இது தொடர்பாக தமிழக அரசு வழக்கு பதிய வில்லை என்றாலும் கூட இந்து அமைப்புகள் சார்பில் கீழ் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது , இந்த வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் பொன்முடி தப்பித்தாலும், உச்சநீதிமன்றம் சென்று பொன்முடிக்கு தண்டனை பெற்று தருவதில் உறுதியாக இருக்கிறது இந்து அமைப்புகள்.

தற்பொழுது பொன்முடி போன்றே சனாதனம் குறித்து உதயநிதி பேசிய வழக்கு வெளிமாநிலங்களில் நிலுவையில் உள்ளது, தேர்தல் நெருங்கும் நேரத்தில் உதயநிதி மீது உள்ள சனாதன சர்ச்சை வழக்கை தீவிர படுத்தும் முடிவில் மத்திய பாஜக அரசு உள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது, அந்த வகையில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் உதயநிதி பேசியது தொடர்பான வழக்கில் உதயநிதிக்கு எதிராக தீர்ப்பு வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தீர்ப்பு அமைந்து சிறைக்கு உதயநிதி சென்றால், வரும் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட முடியாத சூழல் உருவாகும், மேலும் தற்பொழுது நாடாளுமன்றதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்துள் மசோதாவில், 30 நாட்களுக்கு மேல் அமைச்சர் அல்லது முதல்வர் யாராக இருந்தாலும் சிறையில் இருந்தால் அவர்கள் பதவி இழக்க படுவார்கள் என்கிற மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் 30 நாட்கள் சனாதன வழக்கு அல்லது டாஸ்மாக் வழக்குகளில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் சிறை சென்றால், அவருடைய பதவியை இழக்க நேரிடும் என்றும், மேலும் சனாதன வழக்கில் உதயநிதி குற்றவாளி என தீர்ப்பு வந்தால், வரும் 2021 சட்டசபை தேர்தலில் அவரால் போட்டியிடவே முடியாது என கூறப்படுகிறது.