உங்களை தூக்கி எறியும் காலம் விரைவில் வரும்.! திமுக எம்பியை எச்சரித்த பாஜக ஐடி பிரிவு தலைவர்.!

0

அதிமுக தேர்தல் பிரச்சார விளம்பரங்களை திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் வெளியாகி உள்ள விளம்பரங்கள் திமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனின் இந்த செயலுக்கு தருமபுரி திமுக எம்பி செந்தில்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார், அதில், ‘எங்களுக்கு தொழில் தான் முதல். அது தான் முக்கியம். திமுகவிற்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் என்றும் இருக்காது. திமுகவிடம் எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை, என்று வெளிப்பயடையாக அவர்கள் அறிவித்து விட்டு இது போல் விளம்பரங்களை அவர்கள் ஒளிபரப்பட்டும்.

மேலும் சேற்றில் ஒரு கால், ஆற்றில் ஒரு கால் என்றும், சன் டிவி பெரிய வணிகசாம்ராஜ்யமாக இருக்கலாம், ஆனால் கலைஞரின் உடன்பிறப்புகள் மற்றும் நம் தளபதியின் லட்சக்கணக்கான அடிமட்ட தொண்டன் இவற்றை லேசாக எடுத்துக் கொள்வதில்லை, அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள் அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் என தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

இதற்கு பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன், திமுக உயர் கட்டளையின் ஒப்புதல் இல்லாமல் கலாநிதிமாறன் இதைச் செய்ய முடியாது என்பது தெளிவாகிறது. சமைப்பது என்ன என்று யோசித்துப் பாருங்கள் என தருமபுரி திமுக செந்தில்குமாருக்கு பதிலளித்தார், இதற்கு செந்தில்குமார் முற்றிலும் தவறு என சுமந்த் சி ராமன் கருத்துக்கு பதிலளித்தவர், விசுவாசமான திமுக தொண்டனின் லட்சக்கணக்கானோரின் உணர்வுகளுக்கு குரல் கொடுக்கவும் எனக்கு மனசாட்சி இருக்க வேண்டாமா? என்றும்,

மேலும், திமுக ஒரு ஜனநாயகக் கட்சி மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் இடம் எப்போதும் இருக்கும் பொதுவான குரல் எப்போதும் மதிக்கப்படும். என தர்மபுரி எம்பி செந்தில் குமார் தெரிவித்திருந்தார், இந்நிலையில் திமுக முக்கிய தலைவர்கள் அனைவரும் கலாநிதி மாறனின் இந்த செயல் பற்றி வாய் திறக்காமல் அமைதியாக இருக்கையில், திமுக எம்பி செந்தில்குமார் கருத்து தெரிவித்துள்ளது பற்றி தமிழக பாஜக ஐடி பிரிவு தலைவர் CTR நிர்மல்குமார் கூறுகையில்.

சிந்திப்பவர்களுக்கு 20 வருடங்களாக திமுகவில் எந்த வேலையும் இல்லை.திமுக தருமபுரி எம்பி செந்தில்குமார் தைரியத்திற்கு பாராட்டுக்கள். ஒன்றை மட்டும் எழுதி வைத்து கொள்ளுங்கள், அந்த குடும்பத்தில் யார் மீது கல்லெறிந்தாலும் மொத்த குடும்பம் ஒன்றினைந்து உங்களை தூக்கி எறியும் காலம் விரைவில் வரும் செந்தில்குமார் எம்பியை எச்சரித்துள்ளார் பாஜக ஐடி பிரிவு தலைவர் CTR நிர்மல்குமார். ஏற்கனவே கருணாநிதி வாரிசுகளுக்கு மாறன் குடும்பத்துக்கு ஏற்பட்ட மோதலால் மதுரை தினகரன் பத்திரிகை அலுவலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டு அதில் பணியாற்றிய ஊழியர்கள் இறந்தனர், அதன் பின் மீன்டும் மாறன் குடும்பத்துடன் கருணாநிதி வாரிசுகள் இணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .