நாங்க எதுக்கு ஸ்டாலினுக்கு முட்டு கொடுக்க வேண்டும்.! ஸ்டாலினுக்கு எதிராக சட்டையை சுழற்றும் மாறன் பிரதர்ஸ்.!

0

திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு எதிராக, திமுக எம்பி தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டார், திமுகவில் ஸ்டாலின் குடும்பத்திற்கும் மாறன் குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக பனிப்போர் நடந்து வருகிறது, கருணாநிதி உயிருடன் இருக்கும் பொழுதே கருணாநிதி மகன்களான ஸ்டாலின், அழகிரி மற்றும் மகள் கனிமொழி, ஆகியோரை பின் தள்ளிவிட்டு முன்னணி இடத்தை பிடிக்க துடித்தார் தயாநிதிமாறன்.

இதனைத் தொடர்ந்து 2006-2011 கருணாநிதி முதல்வராக இருந்தபோது, திமுகவின் அடுத்த தலைவர் யார் என அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கிடையே போட்டியை உருவாக்கும் நோக்கில், கலாநிதி மாறனுக்கு சொந்தமான தினகரன் பத்திரிகையில் கருத்துகணிப்பு வெளியிட்டதால் பெரும் கலவரம் வெடித்தது. இதனால் மு க அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் உள்ள தினகரன் பத்திரிகை அலுவலகத்தை தீயிட்டுக் கொளுத்தியது, தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அழகிரி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் ஒன்றிணைந்து கருணாநிதிக்கு கொடுத்த அழுத்தத்தால், தயாநிதிமாறன் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார், தயாநிதிமாறன் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்பு தொடர்ந்து திமுகவுக்கு எதிராக கலாநிதி மாறனுக்கு சொந்தமான தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது, இந்நிலையில் மாறன் சகோதரர்கள் பகைத்துக் கொண்டு அரசியல் செய்ய முடியாது என்ற சூழலுக்கு திமுக தலைவர் கருணாநிதி தள்ளப்பட்டதை தொடர்ந்து மீண்டும் திமுகவில் மாறன் சகோதரர்களை இணைத்துக் கொண்டார் கருணாநிதி.

ஆனால் மாறன் சகோதரர்கள் மீண்டும் திமுகவிற்கு வந்தாலும் அவர்கள் கை எக்காரணத்தைக் கொண்டு ஓங்கி விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக இருந்தார், இதனைத் தொடர்ந்து கருணாநிதி மறைவுக்கு பின்பு தயாநிதி மாறனுக்கு முக்கிய பதவி திமுகவில் வழங்கப்படும் என மாறன் குடும்பத்தினரால் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எதிர்பார்த்து காத்திருந்த மாறன் சகோதரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனைத் தொடர்ந்து தங்கள் ஆதரவு இல்லாமல் மு க ஸ்டாலின் எப்படி அரசியல் செய்துவிட முடியும் என தொடர்ந்து தனது ஊடகங்கள் வழியாக திமுகவுக்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார் கலாநிதிமாறன்.

[திமுக தலைவர் ஸ்டாலினை தளபதி என திமுகவினர் அழைப்பது வழக்கம், இந்நிலையில் கலாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தின் மூலம் இளைய தளபதியாக இருந்த விஜய்க்கு தளபதி என அடைமொழி கொடுத்து, ஸ்டாலினுக்கு இருந்து வந்த தளபதி என்ற அடைமொழிக்கு ஆப்பு வைத்தார் கலாநிதி மாறன், அதனைத்தொடர்ந்து ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்து மறைமுகமாகவும், நேரடியாகவும் செயல்பட்டு வந்தார் கலாநிதி மாறன்.

தற்போது உச்ச கட்டமாக அதிமுகவின் தேர்தல் பிரச்சாரங்களை,தனது சன் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து வருவது மட்டுமல்லாமல் தனக்கு சொந்தமான தினகரன் நாளிதழில் முதல் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளது திமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுகவில் தங்களுக்கு எந்த ஒரு முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை, தொடர்ந்து ஸ்டாலின் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டு வருகிறோம் இதற்குமேலும் தாங்கள் எதற்கு ஸ்டாலினுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கலாநிதி மாறன் சாட்டையை ஸ்டாலினுக்கு எதிராக சுழற்ற ஆரம்பித்துள்ளார் கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .