விஜய் என்னுடைய காலுக்கு சமம், அவன் என்ன பெரிய ஸ்டாரா.? ஒருமையில் கீழ்த்தரமாக பேசிய மீரா மிதுன்.

0

நடிகை மீரா மிதுன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையில் சிக்கி வருகின்றவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு சர்ச்சையில் சிக்கிய நடிகை மீரா மிதுன், சமீபத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் சூர்யா குறித்து கருத்து தெரிவித்த போது அவரது ரசிகர்கள் ஆபாசமாக பதிலளித்தனர், இதனை தொடர்ந்து இதே போன்று விஜய் மனைவி சங்கீதா, மற்றும் சூர்யா மனைவி ஜோதிகாவை பேசினால் விஜய் மற்றும் சூர்யா இருவரும் ஏற்று கொள்வார்களா என பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் மீரா மிதுன்.

இந்நிலையில் விஜய் பற்றி அவர் பேசிய வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் வைரலாகிபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் மீரா மிதுன், அந்த வீடியோவில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், இந்த சூர்யா, விஜய் என்ன அவ்வளவு பெரிய ஆளா.? விஜய் ரசிகர் மன்ற தலைவர் என்கின்ற பெயரில் யூடிபில் சேனலிலும், ட்விட்டரிலும் நீ எங்க இருக்க, உன்ன வெட்டிடுவேன்னு மிரட்டுறாங்க, நான் விஜய் மீது குற்றச்சாட்டு குற்றச்சாட்டு வைத்தால், விஜய் தைரியமா பேசணும்,

அதை விட்டுவிட்டு பொட்டை தனமா மறைந்து இருந்து அவருடைய ரசிகர் மன்ற தலைவர்களை தூண்டி விட்டு என்னை டுவிட்டரில் மிரட்டுவது நியாயம் கிடையாது, விஜய் என்ன அப்படி கிழித்து விட்டார், அவர் நடித்த படங்கள் அனைத்தும் பிளாப், அவன் ஒரு ஸ்டார் போன்று சிலர் நம்ப வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர், விஜய் என்னுடைய காலுக்கு சமம், தளபதி என்று அவனுக்கு பட்டப்பெயர் அவனே வைத்துக் கொண்டால் அவன் என்ன பெரிய ஸ்டாரா.? என ஒருமையில் பேசிய மீரா மிதுன்.

சூப்பர் மாடல் என்பது எனக்கு கிங்பிஷர் நிறுவனம் கொடுத்த பட்டம், ஆனால் விஜய் 100 ரூபாயும், ஒரு பிரியாணியும் வாங்கி கொடுத்து அவன் ஸ்டார் என்று ஒரு பிம்பத்தை உருவாக்கினால் உலகம் அதை நம்பி விடுமா.? விஜய் நடித்த படம் 100 கோடி,200 கோடி வசூல் என்று ஆபீஷியல் ஆக ரிலீஸ் செய்கிறார்கள், ஏன் அந்த அபிஷியல் பேப்பர் போட்டோஷாப் ஆக இருக்கக் கூடாதா.? விஜய்க்கு 100 கோடி 200 கோடி படம் வசூல் என்று பொய் சொல்கிறார்.

தொடர்ந்து விஜய் படம் ப்ளாப் ஆனதால், அவருக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காமல், அவனே பினாமி வைத்து படம் நடிக்கிறான், அதுவும் பிளாப், சூர்யா மற்றும் விஜயின் குடும்பத்தினர் சினிமாவில் மாஃபியா போல் செயல்படுகின்றனர், மற்ற இளைஞர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால், சூர்யா மற்றும் விஜய் சினிமாவில் காணாமல் போய்விடுவார்கள் என்று, திறமையானவர்கள் வந்தால் அவர்களுக்கு பல தடைகளை ஏற்படுத்தி அவர்களை சினிமாவை விட்டு விரட்டி அடிக்கின்றனர், இப்படித்தான் விஜய் மற்றும் சூர்யா அவர்கள் சினிமாவில் வளர்ந்துள்ளனர் என நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது..