பண்பற்ற முறையில் பேசும் பண்பாளர் மகன்.. தீப்பொறி ஆறுமுகம் இடத்தை கைப்பற்ற துடிக்கும் நிதி அமைச்சர்.!

0
Follow on Google News

நீதிக்கட்சி தலைவராக இருந்த PT ராஜன் ஒரே மகன் PTR பழனிவேல் ராஜன், 1967ம் ஆண்டு தமிழகத்தில் திமுக முதல் முதலில் அண்ணாதுரை தலமையில் ஆட்சி அமைத்த போது, தேனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தொடர்ந்து 1971ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் மீண்டும் அதே தொகுதியில் தேர்தெடுக்கபட்டர், இதன் பின் 1996ல் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

1996-2001 காலகட்டத்தில் சட்டசபை சபாநாயகராக இருந்தவர், கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரிடமும் மதிக்கத்தக்க நபராக இருந்து வந்தவர் PTR பழனிவேல்ராஜன், பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தாலும் ஒரு போதும் தற்பெருமை பேசாத PTR பழனிவேல் ராஜன், பண்பாளர் என எதிர்கட்சியினர் கூட பாராட்டும் விதத்தில் பண்புடன் நடந்து கொள்பவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பண்பாளர் என பாராட்டையும் பெற்றவர், அவர் தொகுதி மக்களால் பெரிதும் மதிக்க தக்கவர்.

ஆனால் இப்படி பட்ட ஒரு பண்பாளருக்கு மகனாக பிறந்த பழனிவேல் தியாகராஜன் பண்பற்ற முறையில் அநாகரிகமாக பேசி வருவது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கின்றது, முடி திருத்தும் தொழில் செய்பவர்களை அப்படையான் என ஆணவத்துடன் பேசி பெரும் சர்ச்சையில் சிக்கிய தியாகராஜன், பின் வருத்தம் தெரிவித்து அந்த விவகாரத்தில் இருந்து தப்பித்தார், தொடர்ந்த தனக்கு மட்டும் தான் அனைத்தும் தெரியும் என்கிற தோரணையில் பேசிவரும் தியாகராஜன்.

ஜாக்கி வாசுதேவ் என்ன கிழிச்சன் என்றும், பிரபல அரசியல் விமர்சகர் சுமந்த சி ராமனை கிறுக்கு பயன் என்று அநாகரிக்கமற்ற முறையில் ஒருமையில் பண்பற்ற முறையில் பேசி வரும் தியாகராஜன் தற்போது அவர் அநாகரிகமாக பேசி வருவதற்கு பதிலளித்த பாஜக மூத்த தலைவர் H.ராஜா பேசியது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், H.ராஜா வெறி பிடித்த நாய், என தான் ஒரு நிதி அமைச்சர் என்பதை மறந்து அநாகரிகமாக பேசியுள்ளார்.

இந்நிலையில் சமீபகாலமா நிதி அமைச்சர் தியாகராஜன் பேச்சுக்கள், திமுக மேடை பேச்சாளர்களாக இருந்த வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்றவர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், மேலும் இது போன்று பண்பற்ற முறையில் இவர் தொடர்ந்து பேசி வருவது அவருடை தந்தை பண்பாளர் என அழைக்கப்பட்ட பழனிவேல் ராஜன் பெயருக்கு களங்கம் விளைவிப்பது போன்று அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.