கரூரில் நடந்த துயர சம்பவம் தற்பொழுது விஜய்யை அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் மக்கள் துடைத்து எரிய வைத்து விடும் சூழலை உருவாக்கி இருக்கிறது, கரூர் சம்பவம் தொடர்பாக, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தவெக தலைவர் விஜய் ஏற்கனவே இரு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானா விஜயிடம் நடந்த விசாரணை சுமார் 7 மணி நேரம் நீடித்து, மாலை 6 மணியளவில் விஜய் அலுவலகத்திலிருந்து வெளியேறினார். சிபிஐ அதிகாரிகள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதிலளித்ததாகவும், விசாரணையின் போது கூடுதல் சில கேள்விகளும் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நாமக்கல் மற்றும் கரூரில் நடைபெற்ற கூட்டங்கள் “ஜனநாயகன்” திரைப்பட படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வியும் விசாரணையில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், பல கேள்விகளுக்கு “தனக்கு தெரியாது” என்ற பதிலையே விஜய் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “நீங்கள் எப்போது புறப்பட்டீர்கள்?”, “சென்னையிலிருந்து எந்த நேரத்தில் கிளம்பினீர்கள்?”,
“கரூரில் மதியம் 12 மணிக்கு பிரச்சாரம் நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் அறிவித்தது உங்களுக்கு தெரியுமா?” போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு பதிலாக, அனுமதி வழங்கப்பட்ட நேரத்துக்குள் தான் பிரச்சாரத்தை முடித்ததாக விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, அந்த கூட்டம் படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டதா, கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்ட நேரம் குறித்து உங்களுக்கு தகவல் இருந்ததா, நீங்கள் கிளம்பிய நேரமும், அங்கு சென்றிருக்க வேண்டிய நேரமும் என்ன என்பதுபோன்ற கேள்விகளையும் சிபிஐ அதிகாரிகள் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கிய தொண்டர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலும், விஜய் தனது பிரச்சார வாகனத்தின் மீது நின்றபடி உரையாற்றிக் கொண்டிருந்த காட்சிகள் ட்ரோன் மூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் ஏற்பட்ட பெரும் நெரிசல் காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளன.
இந்த காட்சிகளை “ஜனநாயகன்” திரைப்படத்திற்காக பயன்படுத்தும் நோக்கில் படமாக்கியதாகவும், 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு அவை அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவரது பிரச்சார வாகனத்தில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எல்லா ஆதாரங்களையும் நீக்கியதாக நினைத்திருந்த நிலையில், விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம், நீக்கப்பட்டதாக கருதப்பட்ட ட்ரோன் காட்சிகளை மீட்டெடுத்துள்ளோம் என அதிகாரிகள் காட்டியதன் மூலம் விசாரணை தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், ட்ரோன் காட்சிகளில் கூட்டம் பெரிதாகத் தோன்றும் வகையில் மனித சங்கிலி அமைத்து, பொதுமக்கள் வெளியே செல்லாமல் தடுத்து வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் கரூர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடந்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் சென்று சிபிஐ விசாரணைக்கு வருவதற்கு முக்கிய பங்காற்றியவர் ஆதவா அர்ஜுன், ஆனால் தற்பொழுது அதுவே விஜய்க்கு எதிராக திரும்பியுள்ளது.
தொடர்ந்து சிபிஐ நடத்தி வரும் விசாரணையில் விஜய் க்கு எதிராக கரூர் விவகாரம் திரும்பி வரும் நிலையில் சிபிஐ விசாரணை வேண்டும் என ஆதவா அர்ஜுன் முன்னெடுத்து கடைசியில் விஜய்யை இந்த விவகாரத்தில் சிக்க வைத்து விட்டார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

