உதயநிதிக்கு எதிராக காய் நகர்தல்…கட்டம் கட்டப்பட்ட கனிமொழி… உதயநிதிக்கு எதிராக காய் நகர்தல்…அனுமதிக்காத முதல் குடும்பம்…

0
Follow on Google News

கருணாநிதி உயிருடன் இருந்த போதே, முக அழகிரியை ஓரம் கட்டியது போன்று கனிமொழியை ஓரம் கட்ட முக ஸ்டாலின் எடுத்த முயற்சி தோல்வியை தழுவியது. அந்த அளவுக்கு கனிமொழி தன்னுடைய அரசியல் இருப்பை தக்க வைத்து கொண்டார். இந்நிலையில் கருணாநிதி உயிருடன் இருக்கும் வரை அரசியலில் தலைகாட்டாமல் இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின்,

கருணாநிதி மறைவுக்கு பின்பு நடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, அடுத்த மிக குறுகிய காலத்தில் இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் என அடுத்தடுத்து அதிகாரமிக்க பதவிக்கு வந்தார். இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர் என அடுத்தடுத்து உயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றாலும் கூட, கட்சியில் அவரால் இளைஞரணி செயலாளர் பதவியை தாண்டி செல்லவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுவில் திமுகவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்புக்கு காய் நகர்த்தினார் உதயநிதி ஸ்டாலின். ஆனால் கனிமொழி மற்றும் திமுக மூத்த தலைவர்கள் போட்ட முட்டுக்கட்டை, உதயநிதிக்கு கட்சியில் உயர் பதவி கொடுக்கப்படவில்லை,

அதே நேரத்தில் கனிமொழியை ஓரம் கட்ட வேண்டும் என்கிற முடிவை கைவிட்ட முதல்வர் முக ஸ்டாலின், கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், அறிவாலயத்தில் தனி அறை ஒதுக்கினார். மேலும் தேர்தல் பொறுப்பாளர் பொறுப்பு கனிமொழிக்கு வழங்கப்பட்டு, தென் மாவட்டத்தின் கனிமொழிக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார் முக ஸ்டாலின்.

பெரும்பாலும் சென்னையில் தற்பொழுது கனிமொழி இருப்பது இல்லை, தூத்துக்குடியில் முகாமிட்டு, தென்மாவட்ட அரசியலில் ஆழமாக கால் பதிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக கடந்த கடந்த ஒரு வருடத்திற்கு மேல் தென்மாவட்ட அரசியலில் கவனம் செலுத்தி வரும் கனிமொழி, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்கு காய்களை நகர்த்தி வருகிறார் கனிமொழி.

மேலும் சட்டசபையில் தனக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை , அப்போது தான் எதிர்காலத்தில் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்கிற நோக்கில் வரும் சட்டசபை தேர்தலில் கடந்த 2016 சட்டசபை போன்று தனது ஆதரவாளர்களுக்கு சீட் பெற்று தரவேண்டும் என்கிற காய் நகர்தலையும் செய்து வந்தார் கனிமொழி, ஆனால் சட்டசபைக்குள் கனிமொழி வருவதை விரும்பாத முதல்வர் குடும்பம்.

சட்டசபைக்குள் கனிமொழி என்ட்ரி கொடுத்தால், அது எதிர்காலத்தில் அடுத்த முதல்வர் யார் என்கிற போட்டியில் உதயநிதிக்கு எதிராக கனிமொழி உருவெடுத்து விடுவார் என்கிற அச்சம் முதல்வர் குடும்பத்திற்கு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனால் சட்டசபையில் கனிமொழிக்கு மட்டுமில்லை அவருடைய ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் ஒதுக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறதாம் முதல் குடும்பம்.

அந்த வகையில் கனிமொழி திருச்செந்தூர் அல்லது தூத்துக்குடியில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முதல்வரிடம் கோரிக்கை வைத்து வந்த நிலையில் மேலும் சுமார் திமுக முக்கிய தலைவர்கள் பலரும் கனிமொழிக்காக சிபாரிசு செய்தும் கூட முதல்வர் சட்டசபையில் கனிமொழி என்ட்ரி கொடுப்பதை விரும்ப வில்லை என்றும், அந்த வகையில் கனிமொழிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் கனிமொழி கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.