நுனி இலையில் ஆட்சியை இழக்கும் திமுக…. விஜய்யால் ஏற்பட போகும் சேதாரம்… வெளியான கருத்து கணிப்பு…

0
Follow on Google News

நடைபெற்று கொண்டிருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு லண்டனை தலைமையிடமாக கொண்ட ஒரு முன்னணி தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அதிரடி கருத்துக்கணிப்பு தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த தேர்தலில் முக்கியமான “வாக்கு பிரிப்பாளர்” ஆக உருவெடுப்பார் என்பது உறுதியாகி உள்ளது.

திமுக மற்றும் அதிமுக எனும் திராவிட கட்சிகளின் இரு அணிகளின் வாக்கு வங்கியிலும் விஜய் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும், இதனால் தமிழகம் இதுவரை கண்டிராத மும்முனைப் போட்டி உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விஜய் பிரிக்கும் வாக்குகள் அதிமுகவை விட திமுகவிற்கே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கணிப்பு தெரிவிக்கிறது.

குறிப்பாக திமுகவின் பலமாகக் கருதப்படும் இளைஞர்கள் மற்றும் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே விஜய்க்கு உள்ள ஆதரவு, ஆளும் தரப்பிற்கு சவாலாக மாறக்கூடும். கடந்த தேர்தலில் திமுகவுக்கு சென்ற நடுநிலை வாக்குகள் இந்த முறை விஜய்யை நோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளதால், பல தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பு பறிபோகும் என்று அந்த நிறுவனம் எச்சரிக்கிறது.

இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி அதிகபட்சம் 5 தொகுதிகள் வரை வெற்றி பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது புதிய கட்சிக்கான ஆரம்ப வெற்றியாக தோன்றினாலும், அவர் பெறும் வாக்கு சதவீதம் தேர்தல் முடிவுகளை பெரிதும் பாதிக்கும் சக்தி கொண்டதாக இருக்கும். குறிப்பாக திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் பகுதிகளில், விஜய் பெறும் 10 முதல் 15 சதவீத வாக்குகள் வரை பெற்று வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த வாக்கு பிரிப்பு அதிமுக தரப்பிற்கு ஆதரவாகவும், திமுக தரப்பிற்கு எதிராகவும் செயல்படக்கூடும். இந்த கருத்துக்கணிப்பின் முக்கிய அம்சமாக, 2026 தேர்தலில் அதிமுக மிக குறுகிய வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. திமுகவின் வாக்குகள் சிதறுவதும், அதிமுகவின் வாக்கு வங்கி ஓரளவு உறுதியுடன் இருப்பதும் NDA கூட்டணிக்கு சாதகமாக அமையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் தனித்து போட்டியிட்டால் எதிர்ப்பு வாக்குகள் சிதறி திமுகவுக்கு உதவுமா அல்லது அதிமுகவிற்கு பெரும்பான்மையைத் தருமா என்ற கேள்வியில், அதிமுகவிற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. விஜய்யின் அரசியல் பயணம் குறித்து இந்த நிறுவனம் நீண்டகால பார்வையையும் முன்வைக்கிறது.

2026 தேர்தல் விஜய்க்கு அடித்தளத்தை அமைக்கும் தொடக்க கட்டமாக இருக்கும் என்றும், முழுமையான அரசியல் சக்தியாக உருவெடுக்க தமிழக வெற்றி கழகத்திற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது. 2031 சட்டமன்ற தேர்தலின்போது தமிழக வெற்றி கழகம் முக்கிய அரசியல் சக்தியாக வளர்ந்து, ஆளுங்கட்சி அல்லது பிரதான எதிர்க்கட்சியாக உருவாகும் வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பினாலும், அது உடனடியாக நிகழப்போவதில்லை என்பதையும் இது உணர்த்துகிறது. திராவிட கட்சிகளின் பலமான அடித்தளத்தை உடைப்பது விஜய்க்கு பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும், அவர் பெறும் ஒவ்வொரு வாக்கும் 2026 தேர்தலில் புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமாக அமையும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.