பெண்கள் குறித்தும் சைவ, வைணவம் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய ஆபாச கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பொன்முடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனால் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியதாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. விசாரணையில் நீதிபதி பொன்முடிக்கு பல கேள்விகளை இதற்கு முன்பு எழுப்பினார். ” பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது, அமைச்சராக இருந்தவர் ஏன் இப்படி பேச வேண்டும்..? அமைச்சராக இருந்தவர் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்.” என்று நீதிபதி கூறியிருந்தார்..

மேலும் வெறுப்பு பேச்சு தொடர்பான பொன்முடிக்கு எதிரான வழக்குகளில் புலன் விசாரணை செய்ய காவல்துறை தயங்கினால் அந்த வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் என கடந்த 8-ம் தேதி வழக்கு விசாரணையின் போது நீதிபதி பொன்முடியை கடுமையாக சாடினார்.. மேலும் ” மக்களுடன் தான் அமைச்சரும் வசிக்கிறார் என்ற எண்ணம் வர வேண்டும்.. உங்கள் செயலை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து அமைதியாக இருக்க முடியாது..
பொன்முடி மீது புகாரளித்தவருக்கு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் பெற்ற பிறகே வழக்கை முடிக்க முடியும் என்றும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ”இந்த விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட, 100க்கும் மேற்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தி, முகாந்திரம் இல்லை என்று காவல் துறையால் முடித்து வைக்கப்பட்டது,” என கூறி, அது தொடர்பான விபரங்களை தாக்கல் செய்தார்.
அப்போது அதை படித்து பார்த்த நீதிபதி, ‘புகார்களில் முகாந்திரம் இல்லையென்று எந்த அடிப்படையில் காவல் துறை முடிவுக்கு வந்தது? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ”கடந்த 1972ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்துகளையே, முன்னாள் அமைச்சரும் குறிப்பிட்டு பேசினார். அது, அவரின் கருத்துகள் அல்ல. அதுதொடர்பான வீடியோவை முழுமையாக பார்த்தால், அந்த விபரங்கள் தெரியவரும்,” என்றார்.
இதையடுத்து நீதிபதி, “பொன்முடியின் முழு பேச்சு குறித்த வீடியோவையும், கடந்த 1972ம் ஆண்டு, அப்போதைய சமூக சீர்திருத்தவாதி பேசிய பேச்சுகளின் விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்” என காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்நிலையில் 1972ல் நடந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு, பொன்முடி பேசியது இல்லை , எந்த வகையில் இனி வரும் விசாரணையின் போது, பொன்முடி பேசிய வீடியோவை சுட்டி காட்டி, இதில் கடந்த 1972ல் நடந்த நிகழ்ச்சியை எந்த இடத்திலும் பொன்முடி குறிப்பிடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்ப கூடும் என்றும்.
அப்போது பொன்முடி தரப்பில் என்ன பதில் சொல்ல இருக்கிறார்கள் என்கிற பல விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சைவம் – வைணவம் வழக்கை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் பொன்முடி தப்பிக்க வாய்ப்பே இல்லை என்றும், அவருக்கு எதிராக தான் எந்த வழக்கு சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

