சமீபத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் துறையான நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பணியிட நியமனங்களில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை, ஆதாரங்களுடன் தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக F . I . R . பதிவு செய்யவும் தமிழக காவல் துறை தலைமை இயக்குனருக்கு அமலாக்க துறை கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் கே என் நேரு மற்றும் அவருடைய உறவினர் வீடுகளில் நடத்திய அமலாக்கதுறை சோதனையில், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் பணியிட நியமனங்களில் பெரும் ஊழல் நடந்ததற்கான ஆதாரம் தங்களிடம் சிக்கி இருப்பதாக அமலாக்க துறை தங்கள் கடிதம் மூலம் தேறிவது இருக்கிறது. இந்நிலையில் தமிழக காவல்த்துறை தலைமை இயக்குனருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பிய அமலாக்க துறை.

கடந்த அக்டோபர் 29ம் தேதி இந்தியன் எஸ்பிரஸ் நாளிதழை தொடர்பு கொண்டு, அமைச்சர் கே என் நேரு தொடர்பாக , இது போன்ற ஒரு கடிதத்தை தமிழக காவல்த்துறை இயக்குனருக்கு அனுப்பி உள்ளதாக அமலாக்கதுறை தரப்பில் இருந்து இந்தியன் எஸ்பிரஸ் நாளிதலுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது, இதனை தொடர்ந்து இந்தியன் எஸ்பிரஸ் நாளிதழில் இது தொடர்பான செய்தி வெளியான பின்பே, எதிர்க்கட்சிகள் எந்த விவகாரத்தை மிக தீவிரமாக கையில் எடுத்து அரசியல் செய்ய தொடங்கினார்கள்.
மேலும் டெல்லி மேலிடத்தில் இருந்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு, அமைச்சர் கே என் நேரு குறித்த விவகாரம் மக்கள் மத்தியில் பேசப்படவேண்டும், அதற்கான வேலையை உடனே தொடங்குகள் என உத்தரவு வந்ததை தொடர்ந்து, பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய சமூக வலைதளத்தில் அமைச்சர் கே என் நேரு விவகார குறித்து அமலாக்கத்துறை தமிழக காவல் தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதியது குறித்து அமபலப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரமே மிக பெரிய அளவில் பேசும் பொருளாக மாறியது. இந்த நிலையில் அமைச்சர் கே என் நேரு திமுக தலைமையை சமீபத்தில் தொடர்பு கொண்டு , தன்னை பற்றி அமலாக்கத்துறையில் போட்டு கொடுப்பதே சொந்த கட்சியினர் தான் என ஒரு சில முக்கிய திமுகவினர் மீது குற்றசாட்டுகளை திமுக தலைமையிடம் அமைச்சர் கே என் நேரு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது அமலாக்கதுறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் F . I . R . பதிவு செய்தால், அது அமைச்சர் கே என் நேருவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அமைச்சர் கே என் நேருவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள திமுக் அரசு, விஜிலென்ஸ் பக்கம் இதை விசாரிக்க வைத்து, அமலாக்க துறை அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டது போன்று எதுவும் இல்லை என இதை அப்படியே முடித்து விடலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அமைச்சர் கே என் நேரு போட்டி ஒன்றில், திமுகவில் இருக்கும் ஒவ்வொருவரையும் குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலி நானாகி விட்டேன் என தெரிவித்து இருந்தார், இதன் பின்னணியில், இதுவரை ஆளுநர் மாளிகையில் சேகரிக்கப்பட்டு இருந்த திமுக அமைச்சர் பற்றிய பல தகவல்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
அந்த வகையில் தற்பொழுது முதல் விக்கெட் ஆக கே என் நேரு விழுந்துள்ளார், அடுத்தடுத்து, அமைச்சர்கள் ஏ வ வேலு, அமைச்சர் மூர்த்தி, அமைச்சர் சக்கரபாணி, அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அன்பில் மகேஷ் என மிக பெரிய பட்டியல் அமலாக்க துறை கைவசம் உள்ளதாக கூறப்படுகிறது.

