வெளியான கருத்து கணிப்பு… முடிந்தது திமுக சகாப்தம்… யாருமே எதிர்பார்க்காத முடிவுகள்…

0
Follow on Google News

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் சுமார் 10 வருடங்களுக்கு பின்பு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த திமுக, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு என ஆட்சியை பிடித்த திமுக, கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் மக்கள் மத்தியில் கௌதம் அதிருப்தியை பெற்று இருக்கிறது. போதும்பா நீங்க கொடுத்த விடியல் என மன குமுறலை கொட்டி வருகிறார்கள் பெரும்பாலான தமிழக மக்கள்.

இந்நிலையில் இன்னும் தேர்தலும் சில மாதங்களே உள்ள நிலையில்,. தமிழக தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது, திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் திமுக கூட்டணியிலே தொடரும் என்கிற தகவல் தான் வருகிறது, ஆனால் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வாங்கிய தொகுதியை விட அதிகம் பெற வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறது கூட்டணி கட்சிகள், திமுகவும் இறங்கி போக வேண்டிய சூழலில் உள்ளது.

அந்த வகையில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, தமிழக வெற்றி கழகம் தனித்தும், சீமான் தனித்து என சீமானை கணக்கில் சேர்க்க வில்லை என்றாலும், மும்முனை போட்டி வரும் சட்டசபை தேர்தலில் நிலவும் என்றும், அல்லது தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுக – பாஜக உடன் விஜய் கைகோர்க்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இருந்தாலும் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்து போட்டியிடுவதாகவும், கட்சியின் முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டு தேர்தலை சந்திப்பதில் உறுதியாக இருப்பதாக விஜய் தரப்பில் இருந்து வரும் தகவல் உறுதி படுத்துகிறது. இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், மத்திய பாஜக ஆட்சி எப்படி இருக்கிறது, மாநில திமுக ஆட்சி எப்படி இருக்கிறது, முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு எப்படி இருக்கிறது, விஜய் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் , விஜய் கூட்டணி வைக்க வேண்டுமா, அதிமுக – பாஜக செயல்பாடு எப்படி இருக்கிறது, இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றிபெறுவார் என்று பல கேள்விகள் தனியார் நிறுவனம் சார்பில் எழுப்பப்பட்டது.

இந்த சர்வேயில். மத்திய பாஜக ஆட்சி எப்படி உள்ளது என்கிற கேள்விக்கு , பா.ஜ.க ஆட்சி மோசம் என்று 24 சதவீதம் பேரும். சூப்பர் 32 சதவீதம், மற்றும பரவாயில்லை 41 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மாநிலத்தில் தி.மு.க ஆட்சி மோசம் என்று 45 சதவீதம், பரவாயில்லை 35 சதவீதம். சூப்பர் என்று 20 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மாநில திமுக ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மோசம் 45%, சூப்பர் 20% மற்றும் பரவாயில்லை என்று 35% பேர் பதில் அளித்துள்ளனர் .

முதல்வர் ஸ்டாலின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மோசம் 41%, சூப்பர் 22% மற்றும் பரவாயில்லை என்று 37% பேர் பதில் அளித்துள்ளனர் . விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு மோசம் 24%, சூப்பர் 29% மற்றும் பரவாயில்லை என்று 47% பேர் பதில் அளித்துள்ளனர் . விஜய் கூட்டணி வைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு கூடாது 26%, ஆம் 36% மற்றும் பிறகு பார்க்கலாம் என்று 38% பேர் பதில் அளித்துள்ளனர் .

விஜய் கூட்டணி வைக்க வேண்டுமா என்ற கேள்விக்கு வேண்டாம் என்ற 26 சதவீதம பேரும், வேண்டும் என்று 36 சதவீதம் பேரும், பிறகு பார்க்கலாம் என்று 38 சதவீதம் பேரும் பதில் அளித்துள்ளனர்.விஜய் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற கேள்விக்கு, காங்கிரஸ் கட்சிக்கு 18 சதவீதம். நாம் தமிழர் 21 சதவீதம், அதிமுக – பாஜக கூட்டணிக்கு 61 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இன்று தேர்தல் நடந்தால் யார் வெற்றிபெறுவார் என்ற கேள்விக்கு நாம் தமிழர் 5 சதவீதம், திமுக கூட்டணி 36 சதவீதம், தவெக 20 சதவீதம், அதிமுக – பாஜக கூட்டணி 39 சதவீதம் பேர் பதில் அளித்துள்ளனர். அந்த வகையில் அதிமுக – பாஜக கூட்டணி 39% பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று இந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.