சினிமா நடிகையாக டிவி சீரியல் நடிகையாக நிகழ்ச்சி தொகுப்பாளராக டப்பிங் பேசும் பின்னணி குரல் கலைஞராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அம்மு. சமீபகாலமாக வெப் சீரிஸ்களில் குரல் கொடுத்து அம்மு தனது டப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.சில மாதங்களுக்கு முன்பு தெருநாய்களுக்காக ஆதரவாக பேசியவர் நடிகை அம்மு ராமச்சந்திரன் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தற்போது அவர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருக்கிறார். ஆனால் இது அவரை பற்றிய சர்ச்சை அல்ல. அவரது சொந்த வாழ்க்கை கதையை கேட்டால் யாரும் கண் கலங்காமல் இருக்க முடியாது.
கடந்த 1985ம் ஆண்டு மே 26ம் தேதி அன்று சென்னையில் பிறந்தவர் அம்மு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். அவரது தாய் ஒருவரே குடும்பத்தை நடத்தி மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கினார். சிறுவயதிலேயே தனது தாய்க்கு துணையாக பல வேலைகளை செய்து வந்த அம்முவிற்கு ஒரு நாள் ஜெயா டிவியில் தொகுப்பாளராக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு சன் டிவியில் நிகழ்ச்சிகளை அம்மு தொகுத்து வழங்கினார்.

ஒருபுறம் படிப்பு மறுபுறம் வேலை என சமநிலைப்படுத்திய அம்முவிற்கு இளமைப் பருவத்தில் காதல், சுற்றுலா, ஜாலியான வாழ்க்கை போன்ற சந்தோஷமான அனுபவங்கள் கிடைக்கவே இல்லை. நான் என் இளமையை குடும்பத்திற்காக தியாகம் செய்தேன் என்று அம்மு, பின்னாளில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது மனம் நெகிழ கூறியிருந்தார். இதற்கிடையில் சினிமா வாய்ப்புகளும் அம்முவை தேடி வந்தது.
தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களில் அம்மு நடித்திருக்கிறார். இதில் வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா படம் அம்முவுக்கு பெரிய அடையாளமாக இருந்தது. அதில் எஸ்பிபி சரணின் மனைவியாக நடித்த அம்மு தொடர்ந்து மரியாதை மந்திரப் புன்னகை ஒரு மோதல் ஒரு காதல் போன்ற பல படங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்தார். வீட்டுக்கு மூத்த மகளாக இருந்ததால் குடும்பத்தின் பொறுப்பு முழுவதும் அவர் மீது விழுந்தது.
தனது தம்பி தங்கை இருவரையும் நன்றாக படிக்க வைத்து அவர்களின் திருமணத்தையும் செய்து வைத்து தனது வாழ்க்கையை அவர்களுக்காகவே அம்மு அர்ப்பணித்தார். இதனால் தனது திருமணத்தைப் பற்றி அவர் நினைப்பதற்கே நேரமில்லை என்று கூறியிருக்கிறார். திருமணம் செய்யக்கூடாது என்கிற எண்ணம் எனக்கு இல்லை. ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன்.
இல்லையென்றால் மாற்று திறனாளிகள் முதியோருக்கு சேவைகள் செய்வேன். என் வாழ்க்கையை கடவுள் தான் வழிநடத்துவார் என்று அம்மு நம்பிக்கையாக கூறியிருக்கிறார். நடிகை அம்முவை திருமணம் செய்து கொள்ள விரும்பியவர்கள் பலர் இருந்த போதும், குடும்பமே முக்கியம் என்று சொல்லி அவர்களை அம்மு மணந்துக்கொள்ள மறுத்துவிட்டார். தற்போது 40 வயதான அம்மு திருமணமாகாத நிலையிலும் தனிமையை சமாளித்து வலிமையாக வாழ்ந்து வருகிறார்.
இன்றைய சமூக வலைத்தளங்களில் 2ம் தாரமாக வேண்டுமா என்று கேட்கும் சிலரின் நடத்தையால் வேதனைப்பட்டாலும், என் வாழ்க்கை என் தேர்வு என்று தைரியமாக கூறுகிறார் அம்மு. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஆன்மீகம் விரதம் கடவுள் பற்றிய பதிவுகளை அம்மு பகிர்ந்து வருகிறார். தற்போது அவர் பல வெப் சீரிஸ்களுக்கு குரல் கொடுத்து ஸ்டோரி டெல்லிங் ஆப்களிலும் செயல்பட்டு வருகிறார். வாழ்க்கை முழுவதும் குடும்பத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர் என்றும் அதே உறுதியுடன் தனக்கான பாதையில் அம்மு தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

