அமைச்சர் நேருவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் சுமார் 1020 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக , அமலாக்கத்துறை தமிழக போலீஸ் டிஜிபிக்கு அடுத்தடுத்து கடிதங்களை அனுப்பியது . இதற்கான ஆதாரங்கள் வெவ்வேறு இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கிடைத்துள்ளதாகவும, அந்த ஆவணங்கள் , டிஜிட்டல் கருவிகளில் பதிவாகி இருந்த தகவல்கள் அடிப்படையில் இந்த புகார் கடிதங்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரிக்க அறிவுறுத்தி கடிதம் எழுதியது.
ஆனால் அமைச்சர் கே என் நேரு மீது வழக்கு பதிவு செய்யாமல் தமிழக காவல் துறை காலம் தாழ்த்தி வந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த இன்பதுரை இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் அமலாக்கத் துறை அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் கே என் நேரு விவகாரத்தில் தமிழக ஊழல் ஒழிப்புத் துறை காவல் துறையினா் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். விசாரணையின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த நிலையில் அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும் என்று அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” அம்பலமான தந்தை – மகன் கமிஷன் கூட்டணி அமைச்சர் நேரு மீதான அமலாக்கத்துறை அனுப்பிய ஊழல் விவரங்கள் குறித்து வழக்கு பதியக் கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில்,
வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், 03.12.2025 அன்று அமலாக்கத்துறை தமிழக “பொறுப்பு” டிஜிபி-க்கு அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல், “டெண்டர்களுக்கான 7.5% முதல் 10% வரையிலான கமிஷன், “Party Fund” (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது” பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு இருந்தது என்று நினைத்தால், தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள் வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்! “தியாகி” பாலாஜிக்காக வந்த “தொட்டுப் பார், சீண்டிப் பார்” வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா? செந்தில் பாலாஜி வழக்கில் சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே?!
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில் ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை, மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்! இன்னும் இரண்டே மாதங்கள் தான்… அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்! முகத்திரைகள் கிழிக்கப்படும்! இது உறுதி!” என்று அதிமுக தெரிவித்துள்ளது..
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கே.என்.நேருவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்ய தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கு முன்பு செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், அனிதா ராதாகிருஷ்ணன், ஐ பெரியசாமி என அடுத்தடுத்து அமலாக்கத்துறை வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடதக்கது.
2026 தேர்தலுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில் திமுக முக்கிய தலைவர்கள் வரிசையாக நீதிமன்றப் படிக்கட்டுகளை மிதிப்பதும், நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அமலாக்கத்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்கள் பொதுமக்களிடையே திமுக மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

