சமீபத்தில் ஆர்எஸ்எஸ் உயர் மட்ட குழு சென்னையில் நடைபெற்றது இந்த உயர்மட்ட குழுவில் பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களும் பங்கு பெற்று இருக்கிறார்கள். இந்த குழுவில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் திருப்பரங்குன்றம். பழனி, திருச்செந்தூர் போன்ற ஆன்மீக தளம் கொண்ட தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட வேண்டும் என அங்கே பேசப்பட்டிருக்கிறது.
மேலும் வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்த அணைத்து பரிவார் இயக்கங்கள் முழு வீச்சில் தேர்தல் களத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர் தேர்வில் ஆர்எஸ்எஸ் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வேட்பாளர் தேர்வில் ஆர்எஸ்எஸின் முக்கிய பங்கு உள்ளே இருக்கும் என்று சமீபத்தில் நடந்த ஆர் எஸ் எஸ் உயர் மட்ட குழு மூலம் தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் உயர்மட்ட குழுவில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அந்தந்த தொகுதிகளில் மெஜாரிட்டியாக இருக்கும் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவருக்கே தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.4
மேலும் கொள்கை சித்தாந்தம் அடிப்படையில் காட்சியுடன் நெருங்கி நீண்ட வருடமாக பயணித்து வர கூடிய ஒருவரையே வேட்பாளராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பல விதிமுறைகளை ஆர்எஸ்எஸ் உயர்மட்ட குழுவில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சுமார் 55 தொகுதிகளான லிஸ்ட்டை ஏற்கனவே ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக தயார் செய்து வைத்துள்ள நிலையில்.
அதிலிருந்து பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி எல் சந்தோஷ் தெரிவித்தது பொது, 20 சதவிகிதம் என சுமார் 45 தொகுதிகள் வரை அதிமுகவிடம் இருந்து பெறுவதற்கான முயற்சியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் முடிவு செய்துள்ளது. இறுதியில் 30 தொகுதிகளுக்கு குறையாமல் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் உள்ள வெற்றி தோல்வி வித்தியாசம் 5% விற்கு குறைவான பல தொகுதிகளில் கடந்த சட்டசபை தேர்தலில் இருந்தது. குறிப்பாக 2000 வாக்குகள் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் சுமார் பல தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை இழந்தது, அந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலில் அந்த குறைந்த வாக்கு சதவீத வெற்றி தோல்வியை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம் சரி செய்யும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதியை பாஜக பெறுவதில் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கும் பட்சத்தில், அந்த தொகுதியில் மெஜாரிட்டியாக இருக்கும் சமூகத்தை சேர்ந்த, தொடர்ந்து திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்திற்காக களத்தில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தி வரும் களப்போராளி ஒருவருக்கே வரும் திருப்பரங்குன்றம் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தரப்பிலிருந்து வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்துகிறது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிட்டால் தமிழகம் முழுவதும் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம் அரசியல் ரீதியாக பேசும் பொருளாக தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் என ஆர் எஸ் எஸ் முழுமையாக நம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

