பாஜக பெண் எம்.எல்.ஏ கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ப்ளாக் செய்து ஓட்டம் எடுத்த நிதி அமைசர்.! என்ன கேள்வி கேட்டார் தெரியுமா.?

0

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கோவாவிற்கு எதிராக தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கோவாவின் போக்குவரத்து துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ குற்றஞ்சாட்டிருந்தார். இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கோவா மாநிலம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு கோவா மக்களிடம் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோவ அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ தெரிவித்திருந்தார்.

இதற்கு கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது டிவீட்டர் பக்கத்தில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் நடந்து கொண்ட விதம் ஜனநாயகத்தை இழிவு செய்வது போன்று அமைந்துள்ளது, மேலும் நமது தமிழக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்தும். வாய்மொழியாக கோவா போன்ற மாநிலத்தை துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சர் தமிழக முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யவில்லை, இதற்கு பழனிவேல் தியாகராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

இதற்கு டிவீட்டரில் பதிலளித்த பழனிவேல் தியாகராஜன், மாற்றத்திற்காக வேலை செய்யுங்கள், உங்களுடைய பொய்களுக்கு என்னை டேக் செய்வதை நிறுத்துங்கள், நீங்க ஒரு பிறவி பொய்யர் மற்றும் குறைந்த அறிவு திறன் கொண்டவர் என கேள்வி எழுப்பிய ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினருக்கு கடுமையாக பதிலளித்தவர், இது போன்ற தந்திரமான கேள்விகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை என பதிலளித்தவர் கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசனை டிவீட்டரில் பிளாக் செய்துள்ளார்.

தன்னை பிளாக் செய்ததை சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன் இது போன்று விமர்சனங்களை பொறுத்து கொள்ள முடியாதவர் நமக்கு நிதி அமைச்சராக இருப்பது வருத்தம் அளிக்கிறது. நீங்கள் என்னை பொய்யர் அல்லது அறிவுத்திறன் குறைவானவர் என அழைப்பதால் அது உண்மையை மாற்றாது.நீங்கள் சத்குரு , H.ராஜா போன்றோர்கள் பற்றி நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களால் உங்களுடைய மோசமான தன்மையை வெளிப்படுத்தி வருகிறீர்கள் என்றும்.

மேலும், உங்கள் பேச்சில் மூலம் உங்களுடைய அரசியல் முதிர்ச்சி மற்றும் சமுதாய பற்றிய ஒழுங்குமறை என்ன என்பதை காட்டுகிறது. தனிநபரை இழிவு செய்வது, அவர்களை துஷ்பிரயோகம் செய்வது தான் உங்கள் பழக்கம். முதிர்ச்சியற்ற மற்றும் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதில் நீங்கள் சிறந்து விளங்குகிறீர்கள், எதையும் பேசுவதற்கு முன் யோசித்து பேசுங்கள் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.