குழப்பங்களை ஏற்படுத்த சில்லறைத்தனமான நடந்து கொள்வதா.? பாஜக விளக்கம்…

0

கொரோனா சிகிச்சை உபகரணங்கள், மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிப்பதற்கான மத்திய அரசு குழுவில் தமிழகம் இடம் பெறாதது குறித்து பல்வேறு சர்ச்சை எழுந்து வருகிறது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிப்பது தொடர்பாக தற்போது மத்திய அரசின் குழுவில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுவதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விளக்கம் கொடுத்துள்ளார் அதில். தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகளும் நிறுவனங்களும் GST பேனலில் கொரோனா நிவாரண பொருட்களுக்கு வரிவிலக்கு மற்றும் சலுகைகளை வழங்காத மத்திய அரசை விமர்சிப்பது விசித்திரமாக தெரிகிறது. அவ்வப்போது பல்வேறு பிரச்சனைகளை விவாதித்து மறு ஆய்வு செய்வதும் அமைச்சர்கள் அல்லது அதிகாரிகளின் குழுக்களை அமைப்பது ஜிஎஸ்டி கவுன்சிலின் வழக்கமாகும். இந்த குழுக்கள் அமைப்பதற்கு ஒரு செயல்முறை மற்றும் விதிகள் உள்ளன.

பொது அறிவு அல்லது சட்ட அறிவு உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள், நடப்பு குழுவும் அனைத்து மாநிலங்களையும் ஒவ்வொரு குழுவிலும் சேர்க்க முடியாது என்று. எட்டு மாநிலங்கள் மட்டுமே உள்ள நிலையில் – மேகாலயா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா, உத்திரப்பிரதேசம் – பட்டியலில் மற்ற மாநிலங்கள் தங்களை பரிந்துரை செய்ய போராடலாமா அல்லது கோரிக்கை வைக்கலாமா?

24/05/2021 அன்று தமிழ்நாடு சேர்க்கப்பட்டு நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் கேசினோக்கள், ஆன்லைன் விளையாட்டுகள், ரேஸ் கோர்ஸ் ஆகியவை ஆறு மாநிலங்களுடன் GST கமிட்டியில் பரிந்துரைக்கப்பட்டார். வேறு எந்த மாநிலங்களும் தங்களை மேற்கண்ட குழுவுக்கு நியமிக்க வேண்டும் என்று அழுத்தம் தரவோ அல்லது கோரிக்கை தரவோ இல்லை திரு. நியமன செய்யக்கூடாது என தியாகராஜன் எதிர்ப்பு தற்போதைய நியமனத்தை எதிர்ப்பவர்கள் அல்லது கோரிக்கை விடுப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகமும் ஆறு மாநிலங்களுடன் ஐஜிஎஸ்டி மீதான கமிட்டியில் உள்ளது என்பதை. மாநில மற்றும் நாட்டின் நலனில், அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட விதிகளை ஏற்று இணைந்து செயல்படுவது அனைத்து மாநிலங்களின் பொறுப்பாகும். இந்த பிரச்சினையில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் சிறுபிள்ளைத்தனமாக மட்டுமல்லாமல் சில்லறைத்தனமான அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர்.என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.