அமெரிக்க FBIயால் தேடப்படும் ஜெகத் கஸ்பர்… தமிழகம் மிக பெரிய ஆபத்தில் உள்ளது.!எச்சரிக்கும் சுப்பிரமணிய சாமி..

0

தமிழகம் மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதாகவும் மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை தமிழகத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்தினால் தான் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையை சேர்ந்த பாதிரி ஜெகத் கஸ்பர் விடுதலை புலி இயக்கத்தை சேர்ந்த ஒரு தீவிரவாதி, இவர் அமெரிக்க உளவு பிரிவின் FBIயால் தேடப்படும் குற்றவாளி,விடுதலை புலிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ததற்காக குற்றம் சுமர்த்தப்பட்டு, 2009ம் ஆண்டு இவர் மீது அமெரிக்காவில் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது, ஆனால் இவர் அமெரிக்காவில் இருந்து தப்பித்து தமிழகம் வந்தவர் திமுக எம்பி கனிமொழி பாதுகாப்பில் இருந்து வருகிறார்.

மேலும் பாதிரி ஜெகத் கஸ்பர், சர்ச் மூலம் வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் செய்துள்ளார், இவர் நிதி வசூல் செய்த நிறுவனம் விடுதலை புலிகள் பெயரில் வாடிகனில் இயங்க கூடியது, இது போன்று பல்வேறு நாடுகளில் இருந்து நிதி வசூல் செய்துள்ளார், இவருடன் ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேச கட்சியும் கூட்டு என்றும், கனிமொழியை முன்னிறுத்தி சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்திய ஜெகத் கட்ஸ்பர் பின் கனிமொழி பெயரை பயன்படுத்தி அதிக நிதி வசூல் செய்துள்ளார்.

இந்நிலையில் கனிமொழி பெயரில் வசூல் செய்யப்பட்ட பணத்தில் கனிமொழியை ஏமாற்றியுள்ளார் ஜெகத் கட்ஸ்பர்,இதனை தொடர்ந்து தற்போது தன்னை ஏமாற்றிய ஜெகத் கட்ஸ்பரை தற்போது கைவிடும் முடிவில் இருக்கிறார் கனிமொழி.மேலும் தற்போது பிராமண சமுதாயத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் பிராமணர்கள் சிலர் விடுதலை புலி இயக்கத்திடம் இருந்து பணம் பெற்று கொண்டு இவ்வாறு பேசுகிறார்கள் இவர்கள் பிராமண சமூகத்துக்கே அவமான என குறிப்பிட்ட சுப்பிரமணிய சாமி.

மேலும் தமிழ்நாடு மிக பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது, 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்காக போராடிய போலி போராளிகள் போன்று நிறைய போராளிகள் தமிழகத்தில் ஊடுருவி வருகின்றனர் என எச்சரித்த சுப்பிரமணிய சாமி, இவர்களை கண்காணிப்பது தமிழக அரசு மற்றும் உளவு பிரிவின் கடமையாகும், குடியரசு தலைவர் ஆட்சியை அமல் படுத்த வேண்டும் அல்லது மத்திய அரசின் மத்திய ரிசர்வ் போலீஸ் , எல்லைப்பாதுகாப்பு படையை அனுப்பி மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உளவு பிரிவு தீவிரமாக கண்காணித்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவேண்டும் என சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.