திமுக காங்கிரஸ் இடையிலான மோதல் தெருவுக்கு வந்து சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் தமிழக தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பெரும்பாலானோர் சென்றிருந்தார்கள்.
இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் இடத்திற்கு கார்கே, ராகுல் காந்தி, மற்றும் கே சி வேணுகோபால் ஆகியோர் வந்து அமர்ந்தவர்கள் சிறிது நேரத்தில் தனியாக ஒரு அறைக்கு சென்று, தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக தனித்தனியாக உள்ளே அழைத்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இந்த 1 டூ 1 ஆலோசனையில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை கூட உள்ள அனுமதிக்க வில்லையாம்.

இதற்கு முக்கிய காரணம் செல்வபெருந்ததை திமுக அனுதாபி போன்று செயல்படுகிறார் என்கின்ற காங்கிரசாரின் குற்றச்சாட்டு தான், ராகுல் காந்தி செல்வ பெருந்தகையை உள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு தலைவர்களையும் உள்ளே அழைத்து ராகுல் காந்தி, கார்கே மற்றும் கே சி வேணுகோபால் ஆகியோர் கூட்டணி குறித்து அவர்களின் கருத்தை கேட்டிருக்கிறார்கள்.
அப்போது 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்கின்ற கருத்துகளை தமிழகத்தில் இருந்து சென்ற காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்கப்பட்டபோது, பெரும்பாலானோர் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு வேண்டும். அப்படி பங்கு கொடுத்தால் திமுக கூட்டணியில் தொடர்வோம், அப்படி இல்லை என்றால் தமிழக வெற்றி கழகத்திலே கூட்டணி அமைக்கலாம்.
நம்மளுடைய கட்சி வளர்ச்சி தான் முக்கியம் என்றெல்லாம் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே மற்றும் கேசி வேணுகோபால் ஆகியோரிடம் தெரிவித்திருக்கிறார்கள், இதில் வெறும் ஆறு பேர் மட்டுமே திமுக உடனே கூட்டணியை தொடர்வோம் என்று தெரிவித்திருக்கிறார்கள். அப்படி தெரிவித்த அந்த ஆறு பேரை கேசி வேணுகோபாலிடம் இவர்கள் ஆறு பேருக்கும் வரும் சட்டசபை தேர்தலில் சீட் கொடுக்கக் கூடாது என்று ராகுல் காந்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகின்றது.
அந்த வகையில் திமுகவுடன் இனி கூட்டணி வேண்டாம் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய் 100 தொகுதி துணை முதல்வர் மற்றும் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்களிக்க காங்கிரசிற்கு ஆஃபர் விடுத்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் அதிக விருப்பம் தமிழக வெற்றி கழகம் பக்கம் செல்வது என்கிறது டெல்லி வட்டாரங்கள்.
இந்த நிலையில் திமுக சற்று இறங்கி வந்து, வரும் 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு துணை சபாநாயகர், வாரியம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அதிக தொகுதிகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறது, இருந்தாலும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இதில் நம்பிக்கை இல்லையா துணை சபாநாயகர் பதவி வைத்துக்கொண்டு கட்சியை எப்படி வளர்க்க முடியும்.
மேலும் உள்ளாட்சித் தேர்தலில் அதிக தொகுதி கொடுத்தாலும் நாம் கேட்கும் தொகுதிகளை கொடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் தமிழக காங்கிரசில் இருக்கக்கூடிய பெரும்பாலானோர் ராகுல் காந்தியிடம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் ராகுல் காந்தியின் அடுத்த முடிவு என்னவாக இருக்கும் என்கின்ற பரபரப்புக்கு நீடித்து வருகிறது.

