முக ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்று கொள்ளாத ராகுல் காந்தி… டென்ஷனான முக ஸ்டாலின்… கண்டுகொள்ளாத சோனியா காந்தி…

0
Follow on Google News

திமுக காங்கிரஸ் இடையிலான மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் ஐவரு குழு முதல்வர் மு க ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்கின்ற கோரிக்கையை முன்வைத்து சென்றிருந்தார்கள், அப்போதே இது குறித்து எந்த ஒரு பதிலும் நேரடியாக முக ஸ்டாலின் தெரிவிக்க வில்லை என்றும், இருந்தாலும் தொடர்ந்து காங்கிரஸ் தரப்பில் இருந்து எங்கள் கோரிக்கை என்னாச்சு என முதல்வருக்கு தூது அனுப்பிய வண்ணம் இருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் திமுக எம்பி கனிமொழி மூலம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்கின்ற பேச்சுக்கே இடம் இல்லை, இதை பத்தி மீண்டும் கூட்டணி கட்சிகள் பேச வேண்டாம் என கனிமொழி மூலம் ராகுல் காந்திக்கு தெரிவித்திருக்கிறார், ஆனால் தொடர்ந்து ராகுல் காந்தி ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதில் பிடிவாதம் பிடித்து வருவதாகவும்,அதே நேரத்தில் அதற்கு வாய்ப்பே இல்லை என்று முதல்வர் மு க ஸ்டாலின் உறுதியாக இருந்து வருகிறார்.

ராகுல் காந்தி இறங்கி வருவார் என்று திமுக எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் இறங்கி வருவதற்கான வாய்ப்பு இல்லை என்கிறது டெல்லி வட்டாரங்கள். இந்த நிலையில் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்தி கூட்டணி கட்சிகளின் விருப்பத்திற்கு எதிராக ராகுல் காந்தி தான் இந்தி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்று பகிரங்கமாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

இது இந்தி கூட்டணி கட்சிகளுக்கு மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியிருந்தது. அந்த அளவுக்கு ராகுல் காந்தியை முன்னிறுத்தி மு க ஸ்டாலின் பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆனால் இதுவரை 2026 சட்டசபை தேர்தலுக்கு மீண்டும் முதல்வர் மு க ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்கின்ற ஒரு அறிவிப்பை கூட வெளியிடாமல், ராகுல் காந்தி தன்னுடைய கட்சி நிர்வாகிகளை ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று திமுக கூட்டணி கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருவதன் பின்னணியில், முதல்வர் மு க ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள ராகுல் காந்திக்கு விருப்பமில்லை என்கின்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

மேலும் திமுக காங்கிரஸ் இடையிலான உச்சகட்ட மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதை உடனே தலையிட்டு சரி செய்ய வேண்டிய சோனியா காந்தியும் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தது பின்னணிகள் அவருக்கும் திமுக கூட்டணியில் தொடர விருப்பமில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி குறித்து வெளியே பேசக்கூடாது என்கின்ற கடிவாளமும் இதுவரை காங்கிரஸ் தலைமை போடவில்லை, இதன் தொடர்ச்சியாக திமுக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், ஜோதி மணி ஆகியோர் தொடர்ந்து திமுகவை வம்பு இழுத்து வருவது வாடிக்கையாகி இருக்கிறது.

மேலும் கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் இருந்து எம்பிகள் வெற்றி பெறுவதற்கு திமுக மிகப்பெரிய அளவில் பங்கு வகித்தது. அந்த நன்றி விசுவாசம் கூட இல்லாமல் தற்போது 2026 தேர்தலில் விஜய் என்கின்ற ஒரு ஆப்ஷன் தனக்கு இருப்பதால் ராகுல் காந்தி திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருவது முதல்வர் மு க ஸ்டாலினை உச்சகட்ட டென்ஷனில் ஆழ்த்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் திமுகவே விரைவில் கூட்டணியில் இருந்து காங்கிரசை வெளியேற்றி விடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.