வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்தல் நெருங்க நெருங்க திமுகவில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் உச்சகட்ட பதட்டத்தில் இருக்கிறார்கள், இதற்கு முக்கிய காரணம் அமித்ஷாவின் ரமணா பட பாணி ஆபரேஷன் தான், ஏற்கனவே பழைய வழக்குகளில் சிக்கி இருக்கும் திமுகவின் மூத்த அமைச்சர்களான ஐ பெரியசாமி, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வழக்குகளை தூசி தட்டி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது அமலாக்கத்துறை.
இதனை தொடர்ந்து 2021 க்கு பின்பு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு குறி வைக்கப்பட்ட அமைச்சர்களை ரமணா பட பாணியில் கைது செய்ய தீவிரமாக ஸ்கெட்ச் போட்டுள்ளார் அமித்ஷா என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரமணா படத்தில் நடிகர் விஜயகாந்த் அரசாங்கத்தில் லஞ்சம் வாங்க கூடியவர்கள் ஒவ்வொருவர்களாக தட்டி தூக்கி சம்பவம் செய்வார்.

அப்படி தட்டி தூக்கும் பொழுது தமிழகத்திலேயே லஞ்சம் வாங்க கூடியவர்களில் டாப் 5 அதிகாரிகள் யார் என்பதை லிஸ்ட் போட்டு அதில் ஒவ்வொருவராக தூக்கி சம்பவம் செய்வார் விஜயகாந்த். அதே பாணியில் திமுக அமைச்சர்களிலேயே அதிகம் தங்களது துறையில் கொள்ளையடித்தது யார் என்கின்ற டாப் லிஸ்ட்டை அமித்ஷா எடுத்து இருக்கிறார், அதில் ஒருவர் தான் அமைச்சர் கே என் நேரு.
அவர் துறை சார்ந்த இலக்காவில் வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரம் அமலாக்கத்துறை அதிகாரியிடம் சிக்கி இருக்கிறது. குறிப்பாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் லஞ்சம் கொடுத்து வேலை பெற்றவர்களிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் வாக்குமூலமும் பெற்று இருக்கிறார்கள்.
யாரிடம் பணம் கொடுத்தார்கள், எப்படி கொடுத்தார்கள் என்ற வாக்குமூலத்தை பெற்று குறிப்பாக கே என் நேருவின் சகோதரரின் whatsapp உரையாடல்கள் மற்றும் வாட்ஸ் அப் மெசேஜ்களும் அமலாக்க துறையால் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. மேலும் லஞ்சம் வாங்கிய பணம் வெளிநாடுகளில் எப்படி பதுக்கப்பட்டது. எப்படி ஹவாலா பணமாக வெள்ளையாக மாற்றப்பட்டது என்கின்ற முழு ஆதாரமும் அமலாக்கத்துறை கைக்கு சென்று இருக்கிறது.
இதனை தொடர்ந்து கே என் நேரு மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய தொடர்ந்து தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கே என் நேரு மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக காவல்துறை தள்ளப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு சூழலில் எப்படி தேர்தலுக்கு முன்பு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாரோ.? எப்படி சந்திரபாபு நாயுடு மகள் கவிதா தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டாரோ.? அதேபோன்று திமுகவில் இருக்கும் முக்கிய அமைச்சர்கள் ஐந்து பேரை குறி வைத்து இருக்கிறது அமித்ஷா தரப்பு.
அதில் முதலிடத்தில் இருப்பது கே என் நேரு, அந்த வகையில் தேர்தலுக்கு முன்பே கே என் நேரு கைது செய்யப்பட இருப்பதாகவும், மேலும் சில அமைச்சர்கள் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக திமுக அரசின் மீது மக்கள் மத்தியில் அவ பெயரை ஏற்படுத்தும் வகையிலும், மேலும் ஊழல் கறை படிந்த ஆட்சி என்று மக்கள் மத்தியில் திமுக மீது அதிருப்தி ஏற்படுத்தும் வகையிலும் ஒரு சூழலை உருவாக்க இந்த ஆபரேஷன் மிக துரிதமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

