NDA கூட்டணியில் பாஜகவுக்கு கூடுதல் தொகுதி… வெளியான பாஜக வேட்பாளர் லிஸ்ட்… வேற லெவலில் வேட்பாளரை தேர்வு செய்யும் பாஜக.

0
Follow on Google News

தேசிய ஜனநாயக கூட்டணி இறுதி வடிவம் பெற்று, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வரை சென்று இருக்கிறது. குறிப்பாக அதிமுக – பாஜக மீண்டும் கூட்டணி அமைந்த பின்பு, பாமக, TTV தினகரன் ஆகியோர் NDA கூட்டணி உள்ளே வருவதற்கு முன்பே தங்களுக்கு எத்தனை தொகுதி , எந்தெந்த தொகுதி என்பதை இறுதி செய்துவிட்டு தான் கூட்டணியை இறுதி செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் எந்த ஒரு கூட்டணி கட்சிக்கும் மிஸ் ஆகாமல் சீட் ஒதுக்க வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக தெரிவித்து இருக்கிறார், எடப்பாடி பழனிசாமியும் அதற்கு ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஏசி சண்முகம், பாரிவேந்தர், திருமாறன் ஜி போன்ற கூட்டணியில் கட்சி தலைவர்களுக்கு தலா ஒரு தொகுதி என்பது தேசிய ஜனநாயக கூட்டணியில் உறுதியாகி உள்ளது.

குறிப்பாக ஏசி சண்முகம், திருமாறன் ஜி போன்ற கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இதற்கு முன்பு மாற்று காட்சிகளில் இருந்து கூட்டணிக்கு அழைப்பு வந்தாலும் கூட தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறார்கள், அந்த வகையில் இதில் யாருக்கும் இந்த முறை சீட் மிஸ் ஆகி விடாது என்பது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அதிமுக உடன் தொகுதி பங்கீடு குறித்த பட்டியலை பாஜக கொடுத்து இருக்கும் நிலையில், தற்பொழுது ஒரு சில மாவட்டங்களில் கூடுதல் தொகுதியை பெறுவதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் மதுரையில் தெற்கு தொகுதியில் பாஜக போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.. இந்த தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கே சீட் என்பதில் பாஜக இறுதி செய்துள்ளது. அந்த வகையில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த ஒருவர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து தென் இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜிக்கு ஒரு மதுரையில் ஒரு தொகுதியை டிக் செய்து இருக்கிறது அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு தரப்பினரும், அந்த வகையில் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து மதுரையில் கூடுதலாக திருப்பரங்குன்றம் தொகுதியை பெறுவதற்கு மிக கடுமையாக முயற்சி செய்து பாஜக.

அதே நேரத்தில் திருப்பரங்குன்றம் தொகுதி சீட்டிங் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜகவுக்கு கிடைக்கும் பட்சத்தில் யாருக்கு இந்த தொகுதி கிடைக்கும் என்கிற பரிசீலனை பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள் கசிந்துள்ளது. அதில் பாஜக கூட்டுறவு மாநில தலைவர் மகா சுசீந்திரன் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஒருங்கிணைத்த மாவட்ட தலைவராக செயல்பட்ட போது, மிக சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக மதுரை திருப்பரங்குன்றத்தில் பாஜக மிக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவ்கன் நேரடியாக வந்து வாழ்த்தியது குறிப்பிடதக்கது. மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பாளரை பரிசீலனை பட்டியலில் பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம் பெயரும் இடம்பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவலிங்கம், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தை மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அந்த விவகாரத்தை திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மத்தியில் இன்றளவும் உயிரோட்டமாக வைத்து களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றவர். இப்படி களத்தில் இறங்கி கட்சிக்காக படும் படும் ஒருவருக்கே திருப்பரங்குன்றம் தொகுதியி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டால் வாய்ப்பு வழங்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.