பாஜக கதவை தட்டிய விஜய்… கதவை அடைத்த அமித்ஷா… கண்டுகொள்ளாத எடப்பாடி..

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்கையில் கூட்டணியை பலப்படுத்தும் வேலையை தீவிர படுத்தி வருகிறது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும். இதில் NDA கூட்டணியில் TTV தினகரன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணைந்துள்ளது தற்பொழுது தமிழக அரசியல் களத்தில் வலுவான கூட்டணியாக NDA கூட்டணி பார்க்கப்பட்டு வருகிறது, மறுப்பக்கம் திமுக கூட்டணிக்குள் நாளுக்கு நாள் உரசல் அதிகமாகி கொண்டே செல்கிறது.

இதில் புதியதாக கட்சி தொடக்கி இதுற்கும் விஜய் நிலை மிக பரிதாபத்தில் உள்ளது, சினிமாவில் விஜய் ஹீரா என்றாலும் கூட அரசியலில் ஒரு காமெடியன் என்கிற நிலையில் தான் அவருடைய நிலை பரிதாபத்தில் இருந்து வருகிறது. கட்சி தொடங்கி ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என நன்கு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ள விஜய், நான்கு வாசலையும் பார்த்து யாராவது கூட்டணிக்கு வருவருகிறார்களா என காத்திருந்து காத்திருந்து தேர்தலே முடிந்து விடும் போல, சிறிய கட்சிகள் கூட விஜய்யை நோக்கி கூட்டணிக்கு வரவில்லை.

இதில் TTV தினகரன் விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தி வருகிறார். அன்புமணி ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மருது அழகுராஜ் , வைத்தியலிங்கம் போன்றோர் விஜய் கட்சியில் இணைய போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் காட்டு டீ போன்று பரவியது ஆனால் அந்த செய்திகள் அனைத்தும் பொய் என்பதும், இந்த செய்திகள் அனைத்தையும் மீடியா மூலம் பரப்பி விட்டதே ஆதவா அர்ஜுனா தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

குறிப்பாக TTV தினகரன், அன்புமணி ஆகியோர் விஜய் உடன் கூட்டணி பேச்சுவார்த்தையே நடந்த வில்லை என உறுதி படுத்துகிறது நம்பக தகுந்த வட்டாரங்கள். இந்நிலையில் கரூர் விவகாரத்தில் விஜய் ஒரு இக்கட்டான சூழலில் சிக்கி தவிக்க, பாஜக விஜய் ஆதரவாக அறிக்கை வெளியிட்டு மக்கள் மத்தியில் உண்மை தன்மையை உணர வைத்தது, இதன் பின்பே வீட்டுக்குள் முடங்கி வீடியோ மட்டும் போட்டுக்கொண்டிருந்த விஜய் வீட்டை விட்டு வெளியே வர தொடங்கினார்.

மேலும் கரூர் விவகாரத்தின் போது பவன் கல்யாண் மூலம் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையை விஜய் உடன் மேற்கொண்டு வந்தது பாஜக, NDA கூட்டணிக்குள் விஜய்யை கொண்டுவருவதற்கு மிக பெரிய அளவில் முயற்சி செய்தது பாஜக , ஆனால் விஜய் பிடி கொடுக்காமல் இருந்தார், இதற்கு முக்கிய கரணம் காங்கிரஸ் ,விசிக போன்ற காட்சிகள் கூட்டணிக்கு வரும் என்கிற நம்பிக்கையில் இருந்தார் விஜய்.

இந்நிலையில் காங்கிரஸ் டெல்லி தலைமை திமுக உடனே கூட்டணியை தொடர வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து விட்டது என்கிறது டெல்லி வட்டாரங்கள். மேலும் விஜய் உடனான கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் நிறுத்தி கொண்டது என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் விஜய் தனித்து விடப்பட்டு இருக்கிறார், கரூர் விவகாரத்திலே மத கணக்கில் வீட்டை விட்டு வெளியே வராத விஜய் தனித்து 234 தொகுதியில் தைரியமாக போட்டியிடுவாரா என்கிற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

இப்படி ஒரு இக்கட்டான ஒரு சுழலில் பவன் கல்யாண் மூலம் பாஜக கூட்டணிக்கு தூது விட்டிருக்கிறார் விஜய், ஆனால் அமித்ஷாவோ TTV தினகரன் , அன்புமணி ஆகியோர் இணைந்து விட்டார்கள் கூட்டணி வலுவாக உள்ளது விஜய் இனி கூட்டணிக்கு தேவையில்லை என விஜய்க்காக கதவை அடைந்து விட்டாராம் அமித்சா.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விஜய் தொடர்பு கொள்ள முயற்சித்த பொது விஜய்க்கு தொகுதி ஒதுக்க எங்கள் கைவசம் சீட் இல்லை என கைவிரித்து விட்டாராம் எடப்பாடி, இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தேர்தலில் போட்டியிடுவோம், தேர்தலை புறக்கணிப்போமா என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்.