தலித் சமூக வாக்குகளை மொத்தமாக அள்ளும் பாஜக கூட்டணி… திமுக நம்பி ஏமாற தயாராக இல்லை… தமிழகத்தில் அரசியலில் அதிரடி மாற்றம்…

0
Follow on Google News

நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் நடந்த அதே யுக்தி தான் வரும் தமிழக சட்டசபை தேர்தலில் அரங்கேற இருக்கிறது என்கின்ற கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக பீகார் சட்டசபை தேர்தலில் எஸ் ஏ ஆர் பணி மூலம் பல வாக்குகள் நீக்கப்பட்டாலும் கூட, கடந்த சட்டசபை தேர்தலில் ராகுல் காந்தி – தேஜஸ்வி யாதவ் பெற்ற வாக்குகளை இம்முறை பெரிய வித்தியாசம் இல்லாமல் பெற்றார்கள்.

ஆனாலும் கூட கடந்த முறை ச தனித்துப் போட்டியிட்டு வாக்குகளை பிரித்த சிறுசிறு கட்சிகளை பாஜக தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டு வந்ததன் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்று ராகுல் காந்தி தேஜஸ்வி யாதவ் கூட்டணியை தோல்வி அடையச் செய்தது. மேலும் பீகாரில் உள்ள தலித் சமூக வாக்குகள் பெரும்பாலும் கடந்த முறை ராகுல் காந்தி தேஜஸ்வி யாதவ் கூட்டணிக்கு வாக்களித்த நிலையில்,

இந்த முறை பாஜக கூட்டணி பெரும்பாலான தலித் சமூக வாக்குகளை அறுவடை செய்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சட்டசபை தேர்தலின் பொழுது பாஜக ஆட்சிக்கு வந்தால் அம்பேத்கர் இயற்றிய தலித்துக்கான சட்டங்கள் நிராகரிக்கப்படும், குறிப்பாக தலித் மக்களுக்கான ரிசர்வேஷன் ரத்து செய்யப்படும் என்றெல்லாம் ராகுல் காந்தி பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு தலித் சமூக மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி,

அதன் விளைவாக கடந்த சட்ட சபை தேர்தலில் பெரும்பாலான தலித் சமூக வாக்குகளை ராகுல் காந்தி தேஜஸ்வி வேத யாதவ் பெற்றனர். ஆனால் ராகுல் காந்தி மற்றும் இந்தி கூட்டணி கட்சியினர் தங்களை ஏமாற்றுகிறார்கள் என்று உணர்ந்த தலித் சமூக மக்கள். மத்திய பாஜக அரசு பட்டியல் சமூகத்திற்கு என்னென்ன நலத்திட்டங்கள் எல்லாம் செய்து வருகிறது என்பதை உணர்ந்து,

நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பாலான தலிச்சமுகங்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்றுதான் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்திலும் அரங்கேற இருக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இதுவரை விடுதலை சிறுத்தை கட்சிகள் அங்க வகிக்கும் திமுக கூட்டணி பெரும்பாலான தலித் சமூக வாக்குகளை கடந்த தேர்தலில் அறுவடை செய்து வந்த நிலையில் ,

தொடர்ந்து வேங்கைவையில் பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் பல வகையில் திமுக ஆட்சியில் தலித் சமூகம் இழிவுபடுத்தப்பட்டு, மேலும் குறிப்பாக தலித் சமூகத்தினர் பெரும்பாலும் பணி செய்யக்கூடிய தூய்மை பணியாளர்கள் தற்பொழுது வீதியில் இறங்கி திமுக அரசுக்கு எதிராக பணி நிரந்தரம் கோரி போராட்டம், இப்படி தொடர்ந்து பாஜகவை பூச்சாண்டி காட்டி வரும் திமுக தங்களை ஏமாற்றி வருகிறது என்ற உணர்ந்த தலித் சமூகம் மக்கள்கள்,

அதே நேரத்தில் பாஜகவின் திட்டங்களால் தலித் சமூக மக்களுக்கு என்னென்ன பயன்கள் என்பதையும் உணர்ந்து வரும் சட்டசபை தேர்தலில் பெரும்பாலான தலித் சமூக மக்கள் பாஜக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள் என்கின்ற கருத்துக்கணிப்பும் வெளியாகி இருக்கிறது

மேலும் வர்களும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 70 தொகுதிகளும், அதிமுக கூட்டணி சுமார் 150 தொகுதிகள் வரையும், விஜய் 1 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும், அந்த வகையில் அதிமுக கூட்டணி மிக பெரிய வெற்றியை பெற்று ஆட்சி அமைக்கும் என்கிறது கருத்து கணிப்புகள்.