கே என் நேரு தப்பிக்க முடியாது… நீதிமன்றம் அதிரடி உத்தரவு… தேர்தலுக்கு சிறையா.?

0
Follow on Google News

கடந்த ஏப்ரல் மாதம் திமுக அமைச்சர் அமைச்சர் நேரு அவரது சகோதரர் கே என்ற ரவிச்சந்திரன் மற்றும் அவருடைய உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனையின் உதவியாளர்களின் செல்போன்களில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களையும் கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில் வேலைவாய்ப்புக்காக முயற்சித்தவர்களிடம் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் தேர்வர்களின் விவரங்களைப் பகிர்ந்தபின், பணம் பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட ரூ.10 நோட்டின் படங்களை, அந்த உதவியாளர்கள் வாட்ஸ்அப்பில் பரிமாறிக் கொண்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது ஹவாலா பரிமாற்றத்தின் குறியீடாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது

இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய 232 பக்கம் கொண்ட ஆவணங்கள் டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ள அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கையைத் தொடங்குமாறு அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்குக் கடிதம் அனுப்பியது.

ஆனால் அமைச்சர் கே என் நேரு மீது எந்த ஒரு எப் ஐ ஆர் ம் பதிவு செய்யாமல் கால தாமதம் செய்து வந்தது திமுக அரசு , இதனை தொடர்ந்து, அதிமுகவின் எம்.பி. இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், அமைச்சர் கே. என். நேருவின் துறையில் நிகழ்ந்த ஊழல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் மீது முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார். அப்போது, எதற்காக தற்போது வரை வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் மீது முதல் கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார். அப்போது, எதற்காக தற்போது வரை வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதம் உள்ளிட்ட ஆதாரங்களை வரும் ஜனவரி 28-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், திமுக முக்கிய அமைச்சரும் டெல்ட்டா மற்றும் திருச்சி போன்ற மத்திய தமிழகத்தில் செல்வாக்கு மிக்க தலைவரை அமலாக்கத்துறை குறிவைத்து இருப்பது திமுகவினர் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் தன்னை காப்பாற்றி கொள்ள அமைச்சர் கே என் நேரு ஓடுவாரா.? இல்லை தேர்தல் பணியில் தீவிரம் காட்டுவாரா என்கிற விவாதம் அனல் பறந்து கொண்டிருக்கையில் அமைச்சர் கே என் நேரு தன்னை காப்பாற்றி கொள்ள தான் ஓடுவார், ஆகையால் டெல்ட்டா மற்றும் மத்திய தமிழகத்தில் திமுகவுக்கு மிக பெரிய சரிவை ஏற்படுத்தும் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.