இந்துக்கள் என்ன கிள்ளு கீரையா.? பாஜக முதுகில் குத்தும் அதிமுக.! கடும் கொந்தளிப்பில் பாஜகவினர்.!

0
Follow on Google News

தமிழக பாஜக சார்பில் வரும் நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தபடும் என அறிவிப்பு வெளியானது, இந்நிலையில் பாஜக சார்பில் நடைபெற இருக்கும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது, இதனை தொடர்ந்து தற்போது பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அப்போது தமிழக அரசு சார்பில், கொரோனா பரவல் அச்சுறுத்தல் தீவிரமாகும் வேளையில், இந்த யாத்திரைக்கு அனுமதி கொடுக்க இயலாது. இந்த யாத்திரையின் திட்டம், அதில் எவ்வளவு பேர் பங்கெடுப்பார்கள், யாத்திரையில் பங்கெடுப்போர் எங்கு தங்குவார்கள் போன்ற விவரங்களைப் பாரதிய ஜனதா கட்சி குறிப்பிடவில்லை. இத்தகைய நிலையில், அந்த யாத்திரைக்கு அனுமதி வழங்குவது இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஒருதலை பட்சமாக செயல்படுவதாக தமிழக அரசுக்கு எதிராக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர், பாஜக ஐடி பிரிவு மாநில தலைவர் நிர்மல் குமார் கூறுகையில், பாஜகவின் வளர்ச்சி பொறுக்க முடியாமல் முதுகில் குத்தும் வேலையை செய்கிறதா தோழமை? என கேள்வி எழுப்பியவர், மக்களை சந்திக்க, கொரோனா காலங்களில் மக்களுக்கு உதவி செய்ய பாஜக மேற்கொள்ளவிருக்கும் யாத்திரைக்கு அனுமதி மறுக்கும் மாநில அரசு திமுகவின் கூட்டங்களுக்கு எப்படி அனுமதி தருகிறார்கள்? என நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள்” என்று சொன்ன திரு.திருமாவளவன், அதை நியாயப்படுத்தி போராட்டம் நடத்தவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி, ஆனால் இந்துக்களை இழிவுபடுத்துவதை கண்டிக்கும் வெற்றிவேல் யாத்திரைக்கு தடை! இந்துக்கள் என்ன கிள்ளுக்கீரைகளா? என தெரிவித்துள்ளார்.

பாஜக செய்தி தொடர்பாளர் SG சூர்யா கூறுகையில், கோவையில் அக்டோபர் 28-ஆம் தேதி தி.மு.க இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடத்திய போராட்டம். இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் நினைக்கும் போதெல்லாம் தமிழகத்தில் கூட்டத்தை சேர்த்து போராட முடிகிறதே? என கேள்வி எழுப்பிய SG சூர்யா திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.