முதல்வரை பாராட்டிய திருமாவளவன் .! அதிமுக கூட்டணிக்கு அச்சாரமா.? காட்டத்தில் முக.ஸ்டாலின்..

0
Follow on Google News

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளது, திமுக கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏற்கனவே திமுக கூட்டணியில் பாமகவை உள்ளே அழைத்து வர வேண்டுமானால் தற்போது கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் திமுக தள்ளப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் திமுக செயல்பட தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

திமுகவின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உனர்த்த திருமாவளவன், தனது அரசியல் விளையாட்டை தொடங்கியுள்ளார், சமீபத்தில் தேவையின்றி மனுதர்மம் படி இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என திருமாவளவன் பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார், இதற்கு இந்துக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமின்றி, பாஜக மற்றும் இந்து அமைப்புகள் திருமாவளவனின் இந்த செயலுக்கு கண்டனங்களை பதிவு செய்தனர்.

ஆனால் திருமாவளவன் அவர் பேசியதை நியாயப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர், இந்நிலையில் திருமாவளவனின் இந்த அரசியல் பின்னனியில் மனு தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிறுபான்மை மற்றும் பெரியார் ஆதரவாளர்களை தன் பக்கம் நிலைநிறுத்தி திமுகவுக்கு தன்னுடைய பலத்தை காட்டவே திருமாவளவன் செயல்படுவதாகவும், இதற்கு அதிமுக அரசும் திருமாவளவனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருமாவளவன் நடத்திய ஆர்பாட்டங்களுக்கு அதிமுக அரசு எப்படி அனுமதி அளித்தது என்பது குறித்து பின்னனியில் திருமவளவனுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்பட்டு வருவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர், இந்நிலையில் திருமாவளவன் பெரும் கூட்டங்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்த அதிமுக அரசு, பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில் பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேல் யாத்திரைக்கு அனுமதி தர இயலாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில். கொரோனா இரண்டாவது அலை பரவும் நிலையில் அனுமதிக்க இயலாது என்னும் அரசின் நிலைப்பாட்டினை வரவேற்கிறோம். நீதிமன்றமும் அதன்படி தீர்ப்பளிக்குமென நம்புகிறோம். முதல்வருக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள் என திருமாவளவன் தமிழக முதல்வரை பாராட்டியுள்ளது, திமுக கூட்டணியில் இருந்து தான் வெளியேற்றப்படுவதை உணர்ந்த திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு அச்சாரம் போடுவதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.