எங்க தளபதி ஆட்சி இது.. எவனாவது தடுத்தால் வண்டியை விட்டு ஏத்திருவோம் …!விவசாயிகளை மிரட்டி விடியல் அரசின் அமோக மணல் திருட்டு..

0
Follow on Google News

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மொட்டையா கவுண்டன்பட்டி மற்றும் அஞ்சுகுழிபட்டி கிராமப்பகுதியில் உள்ள குளங்களை சுற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள் அந்த குளத்தில் உள்ள வண்டல் மண் அள்ளுவதற்கு அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அள்ளலாம், ஆனால் விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சில சமூக விரோதிகள் அனுமதியின்றி அங்கே அத்து மீறி மணல் அள்ளி வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

அரசு அனுமதியின்றி குளங்களில் வண்டல் மண்ணை அள்ளி செங்கல்சூளை களுக்கு விற்கும் சமூக விரோதிகளுக்கு அதிகாரிகள் தொடர்ச்சியாக உடந்தையாக இருக்கின்றனர். மேலும் தகவல் தெரிவித்து அங்கு வரும் அதிகாரிகள் சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பாக நடந்துகொள்கின்றனர் என அப்பகுதி விவசாயிகள் குற்றசாட்டு வைக்கின்றனர், சட்டவிரோதமாக குளத்தில் வண்டல் மண் அள்ளுவதர்க்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்.

மணல் அள்ளும் சமூக விரோதிகள், இது எங்கள் தளபதி ஆட்சி, எவனாவது தடுத்து நிறுத்த முயன்றால் வண்டியை விட்டு ஏத்திருவோம் என விவசாயிகளுக்கு கொலை மிரட்டல் விடுவதாக கூறபடுகிறது. இதே போன்று பழனி ஒன்றியம் நெய்க்காரப்பட்டி உட்பட 10க்கு மேற்பட்ட இடங்களில் குவாரி ரசீதை முறைகேடாக பயன்படுத்தி மணல் திருட்டில் திமுகவினர் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பாஜகவினர் குற்றசாட்டு வைத்துள்ளனர்.

மேலும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் தடுத்து நிறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் மண் திருடும் திமுக நபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்கிற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதற்கு முன் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பெண் எஸ்.பி. ரவளிபிரியா இருந்த போது, மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்துவிடுவேன் என மிரட்டியதை தொடர்ந்து மணல் திருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் எங்கும் நடைபெற வில்லை.

ஆனால் தற்போது எஸ்.பி.ரவளிபிரியா மாற்றம் செய்யப்பட்ட பின்பு மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக போலி ரசீதை காண்பித்து மணல் திருட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக மணல் திருட்டை தடுத்து நிறுத்த பாஜகவினர் களத்தில் இறக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

திமுகவை எதிர்த்து துர்கா ஸ்டாலின் தலைமையில் பாஜகவின் அடுத்த ஆர்ப்பாட்டமா.?