வெடித்தது சர்ச்சை..பாக்கிஸ்தான் ஆதரவு கருத்து மீண்டும் திமுகவை சர்ச்சையில் சிக்க வைத்த திமுக செய்தி தொடர்பாளர்.!

0
Follow on Google News

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இதற்கு முன் திமுக சர்ச்சையில் சிக்கியது போன்று, தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட போது ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக செய்தி தொடர்பாளர் சரவணன் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே கிடையாது என பேசியதாக.

அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் எப்படி நீங்கள் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி கிடையாது என்று சொல்லலாம் என கேட்க பதில் கூற முடியாமல் நிகச்சியின் பாதியிலே வெளியானர் திமுக சரவணன், இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்நிலையில் இதே போன்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் திமுக செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி. நேற்று நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் வெற்றி பெற்றது குறித்து அவர் தனது டிவீட்டர் பக்கத்தில்.

இதே பத்து விக்கெட்டில் இந்தியா வென்றிருந்தால் பக்தாள்ஸ் ஆடியிருக்கும் ஆட்டமே வேறாக இருந்திருக்கும். ஆனால் வென்றுவிட்டு தோனியிடம் கைகுலுக்கும் பாகிஸ்தான் வீரர்களின் கண்களில் ஆணவமோ திமிரோ இல்லை…விளையாட்டு தேசபக்தி,மதம் கடந்த உயர்வானது என ராஜிவ்காந்தி பதிவு செய்திருந்தார்,இதற்கு திமுகவை சேர்ந்த ஒருவர் சங்கிகளுக்காக இந்தியா தோற்க வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை என பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த சர்ச்சை கூறிய பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அரசியல் விமர்சகர் சுந்தர்ராஜன் சோழன் தெரிவித்துள்ளதாவது. பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு காஷ்மீரில் வெடி வெடிப்பவன் மனநிலையும்,இந்த ட்விட்டை பதிவிட்ட திமுக ராஜிவ்காந்தியின் மனநிலையும் ஒரே நேர்க்கோட்டில்தான் உள்ளது.. ஆனால் உண்மையில் பல திமுககாரர்களின் மனநிலை இதுவல்ல என்பதற்கு கீழே அண்ணா படம் வைத்திருக்கும் ஒரு உபி போட்ட கமெண்ட்டே உதாரணம்..

ஆனால்,மோடி – பாஜகவை வெறுக்கும் பலருக்கு உண்மையில் எண்ணம் இந்தியா மீதிருக்கும் வெறுப்பு என்பதை புரிந்துகொள்வதில்தான் எதிர்கால அரசியல் உள்ளது. இந்த ராஜிவ்காந்தி நாம் தமிழரில் இருந்து திமுக வந்தவர்..இதே மனநிலையில்தான் காலிஸ்தானிய சீக்கியர்கள் வெடி வைத்து கொண்டாடுகிறார்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு.. இந்தியா பலம் பெற வேண்டும்,இது ஒற்றை தேசமாக எழுந்து நிற்க வேண்டும்,

இது வெல்ல வேண்டும்,இதன் கலாச்சாரம் உலகுக்கு உயர்த்தி சொல்லப்பட வேண்டும் என்று நினைப்பவர்களை பிற்போக்குவாதிகள்,சங்கிகள் என்று வரையறுப்பதை அளவுகோலாக வைத்திருப்பவர்கள் மிகப்பெரிய புல்லுருவிகள் என்பதை மட்டும் நாம் மறந்துவிடக் கூடாது.. திமுக என்றோ கைவிட்ட திராவிடஸ்தான் கோரிக்கைகளின் நச்சு விதைகள் இங்கே உருமாறி பலசித்தாந்தங்களின் வழியே வாழ்ந்து வருகிறது..அதை அடையாளப்படுத்தி வீழ்த்துவது ஒவ்வொரு இந்தியத் தமிழர்களின் கடமை என சுந்தர்ராஜன் சோழன் தெரிவித்துள்ளார்.

ஒரே தியேட்டரில் ..ஒரே படம் …எல்லா நாட்களும் ஓடாது.. கல்யாணராமன் கைது.. அண்ணாமலை எச்சரிக்ககை..