சிக்கலில் சினிமா புள்ளிகள்…. டெல்லியில் நீங்க தான் பேசி காப்பாற்ற வேண்டும் … அரசியல் கட்சிகளிடம் கதறும் பிரபல சினிமா குடும்பம்…

0
Follow on Google News

ஒருகாலத்தில் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்திய தமிழ் சினிமா கடந்த 5 ஆண்டுகளில் வெளியான பல படங்களில் தவறான செய்திகளை மக்கள் மத்தியில் விதைக்கும் வகையில், தேசத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைக்கும் வகையிலும் சில படங்கள் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. இது போன்ற படங்கள் சென்சாரை கடந்து எப்படி திரைக்கு வந்தது என்ற கேள்விகளும் எழுந்தது.

மேலும் வியாபார நோக்கத்திற்காகவும், விளம்பரத்துக்காகவும், சிலர் அரசுக்கு எதிராக ஆதாரமற்ற பொய் பிரச்சாரங்களை சினிமா வழியாக மக்கள் மத்தியில் விதைக்கு சம்பவம் அரங்கேறி வருவது குறிப்பிடதக்கது. தேசப்பற்று, சமூக அக்கறை கொண்ட படங்கள் வருவது தற்போது அறிதாக இருந்து வருகிறது. குறிப்பாக சிலர் ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கைகளை கேலி செய்து படம் எடுப்பது, தேசத்திற்கு எதிரான விஷத்தை சினிமா வழியாக மக்கள் மத்தியில் விதைக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவது போன்ற செயல்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது போன்ற செயல்களை கட்டுக்குள் கொண்டு வருபவதற்காக மத்திய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு மசோதாவை அமல் படுத்த உள்ளது, கட்டுப்பாடுகள் இல்லாமல் கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் உலா வரும் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தணிக்கைக்குழு ஒரு படம் தகுதியற்றது என்று கருதினால், அதற்கு சான்றுதர மறுக்கலாம். அந்தத் திரைப்படங்களை திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு அனுப்பினால் அவர்கள் படத்தைப் பார்த்து சான்றிதழ் தருவார்கள்.

தணிக்கைக்குழுவின் முடிவு சரி என்று கருதினால் தீர்ப்பாயமும் சான்றிதழ் மறுக்கும். சம்பந்தப்பட்டவர்கள் பிறகு நீதிமன்றத்தைதான் நாட வேண்டும். இந்நிலையில் அந்த தீர்ப்பாயத்தை இப்போதைய பாஜக அரசு கலைத்தது. இதனால், தணிக்கைகுழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்ட படங்கள் நீதிமன்றத்தை நாடுவது ஒன்றே வழியாக இருந்தது. ஆனால் தற்போது அதற்கும் ஆப்பு வைப்பது போன்று அமைந்துவிட்டது புதிய ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு,

ஏற்கனவே இருக்கும் ஒளிப்பதிவு சட்டத்தில் (1952) திருத்தங்களை கொண்டு புதியதாக ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021 மசோதாவை மத்திய அரசு அமல் படுத்த இருக்கிறது. அதன்படி ஒரு படம் தணிக்கைக்குழுவில் சான்றிதழ் பெற்றாலும், அரசால் அந்த சான்றிதழை மாற்றியமைக்க முடியும். அதாவது யு சான்றிதழ் பெற்ற படத்துக்கு ஏ சான்றிதழ் தர முடியும். தேவைப்பட்டால் அந்த சான்றிதழை ரத்து செய்யவும் முடியும்.

அதாவது சான்றிதழை ரத்து செய்து படம் வெளியாகாமல் முடக்க முடியும். இந்த சட்ட வரைவின் மூலம் தணிக்கைக்குழு, நீதிமன்றம் இரண்டையும் தாண்டிய அதிகாரத்தை மத்திய அரசு பெறுகிறது. இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசால் தடை செய்யப்பட போகும் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களின் நிலை எந்த நேரத்திலும் கேள்விக்குறியாகிவிடும்.இதனை தொடர்ந்து இதுவரை சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்ட தொடங்கிவிடுவார்கள்.

மேலும் தயாரிப்பாளர்கள் இல்லை என்றால் என்ன, நாங்களே சொந்தமாக படம் தயாரித்து வெளியிடுவோம் என சர்ச்சை நடிகர்கள் முடிவு செய்தால், திரையரங்கு உரிமையாளர்கள் அந்த படத்தை வாங்க தயங்குவார்கள். இந்நிலையில் எங்கள் பொழப்பில் மண்ணை அள்ளிப்போட இருக்கும் இந்த சட்டத்தை எப்படியாவது தடுக்க வேண்டும். இல்லை என்றால் சினிமா தொழிலையே நாம் விட்டுவிட்டு தான் போக வேண்டும் என குடும்பமே தொடர் சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்ட அந்த சினிமா குடும்பம்,

இந்த சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்க அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற முயன்று வருவதாகவும் மேலும் அரசியல் கட்சிகளிடம் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகி டெல்லியில் நீங்க தான் பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சினிமா துறையை சேர்ந்த மற்றவர்கள் அமைதியாக இருக்க, தொடர் சர்ச்சையில் சிக்கும் சினிமா கும்பத்தினர் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது. இந்த செய்தி குறித்த கருத்துக்களை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

சூர்யா, விஜய் சேதுபதி, திராவிட குஞ்சு சித்தார்த்… தம்பிகளா எங்கடா போனீங்க.?