இந்தியாவின் 2025–26 க்கான பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ள முக்கிய தகவலின்படி, தமிழகம் உட்பட பல மாநிலங்களின் நிதி நிலை கவலைக்கிடமாக மாறி வருகிறது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்கள் , வருவாய் பெறுமதியை விட செலவுகள் அதிகரித்ததால், அதிகப்படியான கடன் சார்ந்த நிர்வாகத்திற்கு தள்ளப்பட்டுள்ளன என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒரு மாநிலம் வரி வருவாய், கட்டணங்கள், அபராதங்கள், லாபப்பங்குகள் போன்றவற்றின் மூலம் பெறும் பணமே வருவாய் பெறுமதி. இது கடன் தொகையை சேர்க்காமல் அரசின் நேரடி வருவாய். அரசுப் பணியாளர்களின் சம்பளம், ஓய்வூதியம், நலத்திட்டங்கள், கல்வி மற்றும் சுகாதார செலவுகள் போன்ற தினசரி நிர்வாகச் செலவுகள் இதன் மூலம் தான் நிர்வகிக்கப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு வீட்டுச் செலவுடன் ஒப்பிடும்போது, மாத வருமானத்தை விட செலவு அதிகமானால் கடன் எடுக்க வேண்டிய நிலை உருவாகும். அதே நிலை தான் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களுக்கும் ஏற்படுகிறது.
RR/RE விகிதம் என்பது
1.0-க்கு மேல் இருந்தால் — வருவாய் போதுமானது
1.0-க்கு கீழ் இருந்தால் — செலவுக்கு கடன் தேவை
0.9-க்கு கீழ் இருந்தால் — கட்டமைப்பு பற்றாக்குறை அபாயம்
இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்கள் புதிய ஆய்வு படி, 18 மாநிலங்கள் இப்போது 1.0-க்கு கீழ் உள்ளன. இந்த மாநிலங்களில் நிரந்தர செலவுகள் — சம்பளம், ஓய்வூதியம், வட்டி — அதிக பங்கு பிடித்துள்ளன உட்கட்டமைப்பு முதலீடு மிக பெரிய அளவில் குறைந்துள்ளது
இதில் தமிழ்நாட்டில் RR/RE விகிதம் சுமார் 0.88–0.89 அளவில் நீண்டகாலமாக நிலைத்துள்ளது
தமிழ்நாட்டில் வருவாயில் 21% — வட்டி செலுத்துவதற்கே செல்கிறது
மேலும் மொத்த கடன் — சுமார் ₹9 லட்சம் கோடி அளவில் உள்ளது
நிரந்தர செலவுகள் — 60%க்கு மேல்
மூலதன முதலீட்டு இடவசதி குறைவாக உள்ளது.
இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில்,
மாநிலத்தில் வருவாய் குறைவு காரணமாக கடன் பெற்று சம்பளம் செலுத்தும் சூழல் உருவாகி இருக்கிறது.
மாநிலத்தின் கடன் அதிகரிப்பு காரணமாக வட்டி சுமை உயர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் வட்டி சுமை உயர்வு காரணமாக உட்கட்டமைப்பு முதலீடு குறைவாக உள்ளது,
மேலும் முதலீடு குறைவு காரணமாக வளர்ச்சி பாதிப்பு அடைந்து இருக்கிறது.
இதனால் எதிர்கால வருவாயும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில், சில மாநிலங்கள் — வருவாய் வசூல் திறன், டிஜிட்டல் வரி கண்காணிப்பு, கட்டுப்படுத்தப்பட்ட செலவு திட்டங்கள் மூலம் — RR/RE விகிதத்தை 1.0க்கு மேல் வைத்துள்ளன என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் நிதி திட்டமிடலில் வருவாய் கணிப்பு, கட்டுப்படுத்தப்பட்ட நிரந்தர செலவு, நிலையான முதலீட்டு திட்டம் ஆகியவை தற்போதைய கட்டாயமாக உள்ளது. இல்லையெனில், கடன் சுமை அதிகரித்து, வளர்ச்சி வாய்ப்புகள் குறையும் அபாயம் உள்ளது என தமிழகத்தை எச்சரிக்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

