திமுக ஆட்சியில் பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழ்நாடு…. விடியல் ஆட்சியின் சாதனை… வெளியான NITI Aayog அறிக்கை…

0
Follow on Google News

தொடர்ந்து பல வருடங்களாக இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் முன்னணியில் இருந்த தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளி தற்போது மகாராஷ்டிரா மாநிலம் ஏற்றுமதி துறையில் முன்னிலை பெற்றுள்ளது. NITI Aayog வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான Export Preparedness Index ல், அதாவது ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டு அறிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது என்பதை தெளிவு படுத்தி இருக்கிறது.

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு ஏற்பட்ட இந்த பின்னடைவு, மாநிலங்களின் நிர்வாகம், தொழில் சூழல் மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றின் பின்னடைவே இதற்கு காரணமாக பார்க்க படுகிறது. ஒரு மாநிலம் உலக சந்தைக்கு பொருட்களை ஏற்றுமதி செய்ய எந்த அளவுக்கு தகுதியாக உள்ளது என்பதை மதிப்பிடுவதற்காக NITI Aayog இந்த குறியீட்டை உருவாக்கியுள்ளது.

இந்த NITI Aayog நான்கு முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.1. மாநில அரசின் கொள்கை மற்றும் நிர்வாக திறன்

2.தொழில் மற்றும் வணிக சூழல்

3.ஏற்றுமதி தொடர்பான கட்டமைப்பு வசதிகள்

4 உண்மையான ஏற்றுமதி செயல்திறன்

சில மாநிலங்கள் இப்போது அதிக அளவில் ஏற்றுமதி செய்து கொண்டிருக்கலாம். ஆனால் எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ச்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், அந்த மாநிலத்தின், கொள்கை, முதலீடு, கட்டமைப்பு, தொழில் வளர்ச்சியை பொறுத்தே அந்த மாநிலம் ஏற்றுமதிக்குத் தகுதியான மாநிலம்” எனக் கருதப்படுகின்றன.

இந்த அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவின் பலம் என்ன என்பதையும் பார்க்கலாம்,

● சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிதி வசதி மேம்படுத்தப்பட்டது

● மும்பை, புனே நகரங்களைத் தாண்டியும் மாவட்ட அளவில் ஏற்றுமதி வளர்ச்சி விரைவு படுத்தப்பட்டுள்ளது.

● தொழில் செய்ய ஏற்ற நிர்வாக அமைப்பு,

● மனித வளம் மற்றும் புதுமைக்கு முக்கியத்துவம்

என மஹாராஷ்ரா மாநிலம் தமிழ்நாட்டை விட மேலான மதிப்பெண் பெற்றுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டின் நிலை என்னவென்றால், தமிழ்நாடு இன்னும் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி மாநிலங்களில் ஒன்றாகவே உள்ளது. ஆனால் சில சவால்களும் உள்ளது.

அதில்

● நிலம் மற்றும் மின்சார செலவு உயர்வு

● ஏற்றுமதி மையங்கள் சில பகுதிகளில் மட்டுமே குவிந்து இருப்பது

● செலவு போட்டித்திறன் குறைவடைதல்

இதனால் மொத்த தரவரிசையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. மத்திய அரசின் Gati Shakti மற்றும் National Logistics Policy போன்ற திட்டங்களுடன் இணைந்து செயல்பட்ட மாநிலங்களில் கட்டமைப்பு வளர்ச்சி வேகமாக நடந்துள்ளது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

அந்த வகையில் மதிப்பெண் பட்டியலில்

● மகாராஷ்டிரா — 68.01 புள்ளிகளுடனும்

● தமிழ்நாடு — 64.41 புள்ளிகளுடனும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.