அதிஷ்டவசமாக தப்பிய மோடி… கடைசி 15 நிமிடத்தில் வந்த எச்சரிக்கை… ஜோதிமணியை வைத்து ஸ்கெட்ச் போட்ட ராகுல்…

0
Follow on Google News

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சம்பவம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. எனக்கு எதிர்க்கட்சிகள் சவக்குழி தோண்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சியை நோக்கி குற்றச்சாட்டு வைத்துள்ளது, அதன் பின்னணி என்ன என்கின்ற பரபரப்பு நாட்டு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு எம் பி களுக்கும் தனித்தனி இருக்கைகள் பாராளுமன்றத்தில் இருக்கும்.

இதில் சபாநாயகருக்கு எதிராக உள்ள நேர்கோட்டில் ஒரு பக்கம் எதிர்க்கட்சிகளும், மறுபக்கம் ஆளுங்கட்சிகளும் இருப்பார்கள், நாடாளுமன்றத்தின் விதிகளின் படி எதிர்க்கட்சிகளும் ஆளு கட்சிகளும் சபாநாயகருக்கு எதிர்கோட்டில் இருக்கும் அந்த கிராஸ் லைனை தாண்டி , இவர்கள் அந்தப் பக்கமும், அவர்கள் இந்தப் பக்கமும் வரக்கூடாது என்று குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஏதேனும் உறுப்பினர் பாராளுமன்றத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வேறு ஒரு உறுப்பினர் எழுந்து வெளியே செல்ல நேரிட்டாலோ அல்லது உள்ளே வர நேரிட்டாலோ சபாநாயகர் நேர்கோட்டில் எதிர் இருக்கும் நேர்கோட்டில் தலையை குனிந்து கொண்டுதான் வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அனைத்து எம்பிகளுக்குமே பயிற்சி அளிக்க பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் பிரதமர் மோடியை ஜோதிமணி எம்பி உட்பட காங்கிரஸ் எம்பிகள் சூழ்ந்து கொண்டு தாக்க திட்டமிட்டு இருந்தனர், அதனால்தான் பிரதமர் மோடியை அவைக்கு வரக்கூடாது என்று சபாநாயகர் தெரிவித்ததின் பின்னணி குறித்து டெல்லி பத்திரிகையாளர்களிடம் விசாரித்தலில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பிரதமர் மோடி 5 மணிக்கு பாராளுமன்றத்தில் பேசுவதாக இருந்த நிலையில், பிரதமர் பேசுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு காலியாக இருந்த பிரதமர் இருக்கையை நோக்கிச் சென்ற காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சுதா உட்பட பெண்கள் அந்த இருக்கையை சூழ்ந்து கொண்டு கூச்சலிட்டனர். குறிப்பாக பாராளுமன்ற விதிகளின் படி சபாநாயகருக்கு எதிரே இருக்கும் நேர்கோட்டில், அந்தப் பக்கம் இருக்கும் எதிர்க்கட்சி மறுபக்கம் இருக்கும் ஆளும்கட்சியினர் இருக்கை பக்கம் வரக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதையும் மீறி பிரதமர் மோடியின் இருக்கையை சூழ்ந்து கொண்டு ஜோதிமணி எம்பி ஆகியோர் கூச்சலிட்டது, அந்த இடத்தில் பிரதமர் மோடி இருந்திருந்தால் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறது டெல்லி வட்டாரங்கள். குறிப்பாக திட்டமிட்டு பிரதமர் மோடியை அவமரியாதை செய்ய வேண்டும் என்கின்ற மாஸ்டர் பிளானில் தான் காங்கிரஸ் பெண் எம்பிகள் தயாராக இருந்ததாகவும்,

இந்த தகவல் முன்கூட்டியே அறிந்து தான் பிரதமர் மோடியை சபாநாயகர் எச்சரித்து அவைக்கு வர வேண்டாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை. அந்த வகையில் ஒருவேளை பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தால் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, சுதா உட்பட பெண்கள் சூழ்ந்து கொண்டு நாட்டின் பிரதமருக்கு மிகப்பெரிய அவமரியாதை ஏற்படும் வகையில் செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்பிகளை முன்னிறுத்தி ராகுல் காந்தி போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததாகவும், அந்த வகையில் சாதுரியமாக பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வராமல் தவிர்த்தது மிகப்பெரிய அசம்பாவிதத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி இருக்கிறார் என்கிறார்கள் டெல்லியில் உள்ள அரசியல் பார்வையாளர்கள்.