மதுரை வடக்கு தொகுதி கள நிலவரம்… யாருக்கு வெற்றி வாய்ப்பு… வெளியான சர்வே ரிப்போர்ட்…

0
Follow on Google News

சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி கொண்டிருக்கையில், எந்தத்த தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்கிற கள நிலவரம் குறித்து நமது தினசேவல் குழுவினர் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியாக ஆய்வு செய்து வரும் நிலையில், மதுரை வடக்கு தொகுதியின் கள நிலவரம் குறித்து கடந்த 10 நாட்களாக தொகுதி மக்களின் மனநிலை என்ன.? யாருக்கு மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள் என்கிற கள ஆய்வின் ரிப்போர்ட் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மதுரை வடக்கு தொகுதி திமுக சிட்டிங் எம்.எல்.ஏ வான கோ.தளபதி மீண்டும் திமுக சார்பில் இந்த தொகுதியில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதிமுக சார்பில் அக்கட்சியின் மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் சரவணன் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மதுரை வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கோ தளபதி மீது அந்த தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருவதை பார்க்க முடிகிறது.

சாலை வசதி, குடிநீர் வசதி என மக்களின் அடிப்படை வசதியை கூட முறையாக கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் செய்து கொடுக்க வில்லை என குற்றச்சாட்டும் மக்களிடம், உங்கள் சட்டமன்ற உறுப்பிர் கோ தளபதியை சந்தித்து முறையிட்டீர்களா என கேட்ட போது, அவரை எதாவது கட்சி மேடையில் பேசும் வீடியோவை தான் போனில் பார்க்கிறோம், நேரில் பார்க்க முடியல, இப்படி இருக்கையில் நாங்கள் எங்கே அவரை தேடி, எப்படி எங்கள் குறைகளை சொல்வது என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதியை எங்கே .? எப்படி சந்திக்கலாம் என நம்மிடமே கேட்கிறார்கள் மதுரை வடக்கு தொகுதி மக்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அதிமுக மாநில மருத்துவ அணி இணை செயலரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன், ஒரு சட்டமன்ற உறுப்பினர் செய்ய வேண்டிய வேலைகளை, இவர் செய்து வருவது, அந்த தொகுதியில் எதாவது ஒரு பிரச்சனை என்றால், அந்த தொகுதி மக்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதியை சந்தித்து தங்கள் குறைகளை முறையிடுவதற்கு பதிலாக டாக்டர் சரவணனை சந்தித்து முறையிட்டு வருகிறார்கள்.

மேலும் டாக்டர் சரவணனும், அந்த தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து, உடனே அதற்கான தீர்வுகளை செய்து வருவதை பார்க்க முடிகிறது. சமீபத்தில் கூட மதுரை செல்லூர் பந்தல் குடி கால்வாய் சுகாதாரமற்ற ஒரு சூழலில், கொசுக்கள் நிரம்பி, அந்த பகுதி மக்கள் கொசுக்கடியில் சிரமப்பட்டு, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என அந்த பகுதி மக்கள் டாக்டர் சரவணனிடம் முறையிட்டு இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்த டாக்டர் சரவணன் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் உள்ள கொசு முட்டைகளை அழிக்க ஸ்பிரேயர் மூலமாக மருந்துகள் தெளித்ததுடன், தெருக்கள் முழுவதும் கொசு மருந்துகள் தெளித்து, மற்றும் கொசுவை விரட்டும் புகை அடிக்கும் பணிகளையும் மேற்கொண்டு, அந்த பகுதி மக்களுக்கு உடனடி தீர்வு கண்டு கொடுத்து இருக்கிறார்.

இது போன்று பல பிரச்சனைகளை எங்களுக்கு சரி செய்து வைத்து இருக்கிறார் டாக்டர் சரவணன் என நம்மிடம் அடுக்கி கொண்டே செல்கிறார்கள் மதுரை வடக்கு தொகுதி மக்கள். இப்படி அறிவிக்கப்படாத சட்டமன்ற உறுப்பினர் போன்று உடனுக்குடன் மக்கள் பிரச்சனையை தீர்த்து வைத்து வரும் டாக்டர் சரவணன் செய்லபாடுகளால் அந்த பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்று இருப்பதும், மறுபக்கம் மதுரை மாநகராட்சியின் மெத்தன போக்கு, மற்றும் அந்த தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி என ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது அதிமுக வேட்பாளராக களம் இறங்கும் டாக்டர் சரவணனுக்கான வெற்றி வாய்ப்பு அந்த தொகுதியில் மிக பிரகாசமாக இருப்பதை பார்க்க முடிகிறது.