முக ஸ்டாலினின் பொய்யான குற்றசாட்டு… புட்டு புட்டு வைத்த மத்திய அரசு… தோலுரிக்கப்பட்ட கடிதம் நாடகம்…

0
Follow on Google News

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், மத்திய ரயில்வே துறை மீது பல குற்றசாட்டுகளை வைத்து இருந்தார். அதில் மத்திய ரயில்வே அமைச்சகம் நிதியை விடுவிப்பதில் தாமதம் செய்ததாக முதல்வர் முக ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் அசைவினி வைஷ்ணவ்,

தமிழ்நாட்டிற்கான ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு, 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 8.5 மடங்கு உயர்ந்துள்ளதாகவும், 2026–27 ஆண்டிற்காக ₹7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மாநிலத்திற்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த ஒதுக்கீடுகளில் ஒன்றாகும் என தெளிவுபடுத்தி இருக்கிறது மத்திய பாஜக அரசு.

மேலும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ள மற்றொரு குற்றச்சாட்டுகளின் ஒன்றான, 19 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு நில எடுப்பு செய்யப்பட வேண்டிய 1273.05.15 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்களில், 1198.02.34 ஹெக்டேர் பரப்புள்ள நிலங்கள், அதாவது 94 விழுக்காடு நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, அவை ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்துள்ள நிலையில்,

இதற்கும் மத்திய அரசு கொடுத்த விளக்கத்தில், தமிழகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்கு தேவையான மொத்த 4,326 ஹெக்டேயர் நிலத்தில் இதுவரை 1,052 ஹெக்டேயர் நிலம் மட்டுமே மாநில அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது மொத்த தேவையின் சுமார் 24 சதவீதம் மட்டுமே என்று கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே ₹1,465 கோடி வழங்கியிருந்தாலும், பல திட்டங்கள் நில ஒப்படைப்பு தாமதத்தால் பின்னடைவு அடைந்துள்ளதாக மத்திய விளக்கம் அளித்துள்ளது.

அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 94 விழுக்காடு நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, அவை ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நிலையில், சுமார் 24 சதவீதம் மட்டுமே நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு பதில் கொடுத்து இருக்கிறது.

மேலும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளது போன்று, நிதி பற்றாக்குறையால் திட்டங்கள் தாமதமாகவில்லை என்றும், நிலம் கையகப்படுத்தும் பணிகளே முக்கிய தடையாக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை–தூத்துக்குடி புதிய பாதை திட்டத்தில் சுமார் 91% நிலம் நிலுவையில் உள்ளதோடு, திண்டிவனம்–செஞ்சி–திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்தில் 86% நிலம் இன்னும் பெறப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்–தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு 2019ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது, மேலும் தமிழ்நாட்டில் ரயில்வே உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டுள்ளது என்றும், மாநில அரசின் விரைவான ஒத்துழைப்பு கிடைத்தால் திட்டங்கள் மேலும் வேகமாக நிறைவேறும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் முதல்வர் முக ஸ்டாலின் மத்திய ரயில்வே துறை மீது தெரிவித்துள்ள குற்றசாட்டுகளுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள பதிலடி முழுக்க முழுக்க திமுக அரசின் மீது உள்ள தவறை மறைப்பதற்கான முயற்சி தான் முதல்வரின் இந்த கடிதம் நாடகம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.