திமுக – காங்கிரஸ் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தேர்தலுக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்கையில் இன்னும் இரண்டு கட்சிகளுக்கும் சுமுக முடிவு எட்டப்படாமல் இழுபறியில் சென்று கொண்டிருக்கிறது. புதியதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் தரப்பு காங்கிரஸ் கட்சிக்கு 70 தொகுதிகள், 1 துணை முதல்வர் பதவி, 6 அமைச்சர் பதவிகள், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் 28 தொகுதிகள் என காங்கிரஸ் வருகைக்காகா காத்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் இருந்து ஆட்சியில் பங்கு என்ற காணகிடைக்காத விஷயங்களை விஜய் தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி மிக பெரிய கனவில் மிதக்க தொடங்கி இருக்கிறது, இதனால் எப்படி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யின் ஆஃபர்களை அனுபவிப்பது என யோசித்த காங்கிரஸ் தொடர்ந்து திமுகவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.

திமுகவிடம் 41 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத இடங்கள் என காங்கிரஸ் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்து வருகிறது.ஆனால் காங்கிரசை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், இதுவரை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவைக் கூட திமுக தலைமை அமைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அதாவது தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க காங்கிரஸ் தரப்பில் குழு அமைக்கப்பட்டு சுமார் 1 மாதம் கடந்த நிலையிலும், திமுக இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வக் குழுவை அமைக்காமல் மௌனம் காப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது திட்டமிட்டு காங்கிரஸ் கட்சியை உதாசீன படுத்தும் செயலாகவே பார்க்கப்படுகிறது.
இப்படி தொகுதி பங்கீடு குழுவை அமைக்காமல் திமுக தாமதத்திற்கு முக்கியக் காரணம், காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளைத் தர வேண்டும் என்பதில் காட்டும் பிடிவாதம் தான் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட இடங்களை விடக் குறைவான தொகுதிகளைப் பெற காங்கிரஸ் தயாராக இல்லை என்பது, பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கே முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது.
மறுபுறம், திமுக தலைமை காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை ஏற்பதற்குத் துளியும் ஆர்வம் காட்டவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்கினால், அது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்குத் தேவையான இடங்களை வழங்குவதில் சிக்கலை உருவாக்கும் என்றும், இது தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் என்றும் திமுக மேலிடம் கருதுகிறது. “சீட்” எண்ணிக்கையை காங்கிரஸ் கணிசமாகக் குறைத்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து யோசிக்க முடியும் என்பதில் முதல்வர் முக ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது காங்கிரஸ் 30 சீட் என்கிற முடிவுக்கு வந்த உடன், பேச்சுவார்த்தைக்கு அழைத்து இறுதியாக இந்த பிடி 25 சீட் என காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 25 சீட் மட்டுமே ஒதுக்கும் முடிவில் முதல்வர் முக ஸ்டாலின் இருப்பதாக கூறப்படுகிறது, அந்த வகையில் 25 சீட்டுக்கு மேல் 1 தொகுதி கூட அதிகம் இல்லை , இஷ்டம் இருந்தால் கூட்டணியில் இருக்கட்டும், இல்லை என்றால் வெளியேறட்டும் என்கிற முடிவில் திமுக தலைமை உறுதியாக இருப்பதால், தமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை படு மோசமாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

