கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற அணைத்து தேர்தலிலும் வெற்றி பெற்று வந்த திமுகவுக்கு வரும் 2026 சட்டசபை தேர்தல் பலத்த அடியை கொடுக்கும் என்கிறது அரசியல் களநிலவரம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக அதிமுக – பாஜக இரண்டு கட்சிகளும் தனி தனியே கூட்டணி அமைத்து போட்டியிட்டது, திமுக அணைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கான காரணமாக அமைந்து விட்டது.
அந்த வகையில் திமுகவுக்கு எதிரான வலுவான கூட்டணி இல்லை என்பதாலே தொடர்ந்து திமுக வெற்றி பெற்று வருகிறது என்பதை புரிந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டசபை தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகும் வரை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.

வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் வாக்குகளை பிரித்து விடுவார்கள், எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என மிதப்பில் இருந்த திமுக தூக்கத்தை கலைத்தது அதிமுக – பாஜக கூட்டணி உறுதியான விஷயம். மேலும் விஜய் அரசியல் வருகை திமுகவுக்கு மேலும் சரிவை சந்தித்து இருக்கிறது, திமுக வாக்குகள் பெருமைப்பாலும் விஜய் பிரிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, குறிப்பாக திமுக பக்கம் செல்ல இருந்த இளம் தலைமுறை வாக்குகள் வரும் சட்டசபை தேர்தலில் விஜய் அறுவடை செய்து விடுவார் என்கிறது அரசியல் கள நிலவரம்.
இந்நிலையில் திமுக தலைமை, சமீபத்தில் தனியார் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் வரும் 2026 சட்டசபை தேர்தலில் குறித்து கருத்துக்கணிப்புகளை எடுக்க வைத்து இருக்கிறது. சுமார் மூன்று நிறுவனங்கள் தனி தனியாக எடுத்த அந்த கருத்துக்கணிப்பின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட சர்வே ரிப்போர்ட் தமிழகம் முதலவர் பார்வைக்கு சென்று இருக்கிறது. இந்த ரிப்போர்ட்டை பார்த்து ஆடி போய் இருக்கிறார் முதல்வர் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதியில் சுமார் 110 தொகுதியில் திமுக உறுதியாக தோல்வியை தழுவும் என அந்த சர்வே ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது, மேலும் சுமார் 15 தொகுதிகள் கடும் இழுபறியில் இருப்பதாகவும், தற்போதையை நிலவர படி திமுக கூட்டணி 110 தொகுதிக்குள் தான் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது, மேலும் எதிர்க்கட்சிகள் திமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் போது மேலும் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அந்த சர்வே ரிப்போர்ட் தெரிவித்து இருக்கிறது.
இதனை தொடர்ந்து உடனே திமுக உயர் மட்ட குழு கூடியிருக்கிறது, திமுக பலவீனமாக தொகுதிகளில், அதிக கவனம் செலுத்தும் வகையில், ஒரு எம்பிக்கு 3 முதல் நான்கு தொகுதி என ஒதுக்கப்பட்டு இருக்கிறது.மேலும் திமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடி உத்தரவு பறந்து இருக்கிறது, பலவீனமாக தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும், என திமுக உயர்மட்ட குழுவில் இருந்து உத்தரவு பறந்து இருக்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே திமுகவுக்கு மிக பெரிய சரிவை ஏற்ப்படுத்தி இருக்கும் நிலையில், தற்பொழுது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள், மேலும் விஜய் உடன் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல இருப்பதாகவும் காங்கிரஸ் மேலிடம் விஜய் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், விஜய் உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், திமுக வரும் 2026 சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாது என்கிறது அரசியல் கள நிலவரம்.

