இப்போது ஒருவரை ஒருவர் ஜெயிக்க நயவஞ்சகம் சூழ்ச்சி அவரது புகழை வியாபாரத்தை செல்வாக்கை எப்படி கெடுத்து அவரது வளர்ச்சியை எப்படி தடுப்பது என்பதுதான் நோக்கமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய பதிவுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை அபிராமி வெங்கடாசலம்.
நடிகர் அஜீத் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படம் மூலம் சினிமாவில் இவர் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். டிவி சீரியல்கள் திரைப்படங்கள் மற்றும் இணையதள வெப் சீரிஸ் களில் தொடர்ந்து நடிகை அபிராமி வெங்கடாசலம் நடித்து வருகிறார்.

அவர் தற்போது தனது வலைதள பக்கத்தில் செய்திருக்கும் ஒரு புதிய பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. நீங்க சொல்றதை கேட்க நாலு பேர் இருந்தாங்கன்னா நல்லதையே சொல்லுங்க, நீங்க செய்யறத பார்க்க நாலு பேர் இருந்தாங்கன்னா நல்லதையே செய்ங்க, களத்தில் சந்திப்போம் என்ற சவாலான வரிகளை எழுதி அத்துடன் ஒரு போஸ்டரை அபிராமி அதில் இணைத்து பதிவிட்டுள்ளார்.
அந்த போஸ்டரில் திராவிட வெற்றிக் கழகம் என்ற தலைப்பு இடம்பெற்றுள்ளது. அது ஒரு புதிய அரசியல் கட்சி அறிவிப்பு போல தோற்றமளிக்கிறது. ஆனால் இது உண்மையில் அரசியல் அறிமுகமா அல்லது புதிய படத்திற்கான புரமோஷனா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்த போஸ்டரை பார்த்த பலரும் இது வெப் சீரிஸ் ஆக வெளியாக வாய்ப்பு அதிகம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர் அபிராமி நடிக்கும் புதிய படமாக இருக்கலாம் என்கின்றனர்.
ஆனால் போஸ்டர் வடிவமைப்பின் தன்மை அரசியல் பிரசாரக் கட்சி அறிவிப்பு போல காட்சியளிப்பதால் இது அரசியல் நையாண்டி சார்ந்த ஒரு படைப்பாக இருக்கும் என்றும் அதிகம் பேசப்படுகிறது. திராவிட வெற்றி கழகம் என்ற பெயர் சமீபத்தில் நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றி கழகம் கட்சியை மறைமுகமாக சாடும் விதமாக உள்ளதாக பலரும் கூறுகின்றனர். நடிகர் விஜயை குறிவைத்த நையாண்டி போல ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்கிறார்கள்.
இந்த பதிவு குறித்து பல்வேறு விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் நடிகை அபிராமி வெங்கடாசலம் இந்த புதிய முயற்சியால் மீண்டும் ஒருமுறை ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பி உள்ளார். இது திரைப்படமாக வருகிறதா வெப் சீரிஸ் ஆக வெளிவருகிறதா என்பது அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானால் மட்டுமே உறுதியாகும். ஆனால் திராவிட வெற்றி கழகம் என்ற பெயர் ரசிகர்களிடம் பெரிய விவாதத்தை கிளப்பி வருகிறது.
அரசியல் சாயலில் வெளிவந்த இந்த போஸ்டர் நடிகை அபிராமியின் கேரியரில் ஒரு புதிய மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் திராவிட வெற்றிக் கழகம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் என்ன என்பதை அறியவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விஜய் டிவிகே என்றால் இது டிவிகே தான். டி மற்றும் ட்டி என்பது மட்டும்தான் வித்யாசம். இன்றைய அரசியல் சூழலில் நடிகர் விஜயும் டிவிகேவும் அதிக கவனம் பெற்றிருக்கின்றனர். அந்த நேரத்தில் திராவிட வெற்றிக் கழகம் போஸ்டர் மூலம் அதிக கவனம் பெற்று டிரண்டிங் ஆகி விட்டார் நடிகை அபிராமி வெங்கடாசலம்.

