கையில் வேல் ஏந்தி, பெரியார் கொள்கையை குப்பையில் வீசிய ஸ்டாலின்.! நாடகம் தமிழகம் இந்துக்களிடம் எடுபடுமா.?

0
Follow on Google News

சில மாதங்களுக்கு முன்பு நடந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை அவருடைய நினைவிடம் சென்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின், அங்கே விபூதி கொடுக்கப்பட்டதை நெற்றியில் பூசாமல் அலட்சியமாக தட்டிவிட்டு, தான் பெரியார் கொள்கையில் உறுதியாக இருப்பது போன்று காட்டி கொண்டார், ஆனால் தற்போது இந்துக்கள் வழிபடும் முருகனின் ஆயுதமான வேலை கையில் பிடித்துள்ளது இந்துக்கள் ஓட்டுக்களை பெற திமுக நடத்தும் நாடகமா.? என கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

பெரியாரை முன்னிறுத்தி அவருடைய கொள்கைகளையும், பகுத்தறிவுகள் மற்றும் நாத்திகம் பேசி வந்த திமுக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தனது போக்கை மாற்றியுள்ளது, இதற்கு காரணம் எப்போதும் இல்லாத தமிழக இந்துக்களின் எழுச்சி தான் என்றும், சிறுபான்மை வாக்குகளுக்காக இந்துக்களையும் இந்து கடவுள்களையும் தொடர்ந்து இழிவாக பேசி வந்த திமுகவுக்கு எதிராக தமிழக இந்துக்கள் கேள்வி கேட்க தொடங்கியது மட்டுமில்லாமல் அவர்களுக்கு எதிராக குரல் கொடுக்கவும் தொடங்கியுள்ளனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே, தமிழக்தில் உள்ள பெரும்பாலான இந்துக்கள் வீடுகளில் முன்பு, இந்து கடவுள்களை இழிவாக பேசும் திமுகவுக்கு எங்கள் ஒட்டு கிடையாது என ஸ்டிக்கர் ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர், இதனை தொடர்ந்து திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உண்டியலுக்கு பாதுகாப்பு எதற்கு என பேசிய திமுக எம்பி கனிமொழி தேர்தல் நேரத்தில் தனது தாயாரை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அனுப்பி வைத்து விளம்பரம் செய்து கொண்டார், மேலும் பெரியாரை முன்னிறுத்தினால் வாக்கு பெற முடியாது என்பதை உணர்ந்து,தனது டிவீட்டர் பக்கத்தில் இருந்த பெரியார் கவர் புகைப்படத்தை கனிமொழி நீக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் இந்துக்கள் வழிபடும் கந்தசஷ்டி கவசத்தை இழிவு செய்த கறுப்பர் கூட்டம் விவகாரம் தமிழகம் முழுவதும் இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த செந்தில்வாசன் திமுக ஐடி பிரிவில் இருந்தது தெரியவந்தது, இதனை தொடர்ந்து திமுக மற்றும் திராவிட கழகம் இந்த கறுப்பர் கூட்டம் பின்னனியில் இருப்பதாக தமிழக பாஜகவினர் தீவிரமாக பிரச்சாரம் செய்தனர்.

மேலும் தொடர்ந்து கறுப்பர் கூட்டத்தை கண்டிக்கும் விதத்தில் தமிழகம் முளுவதும் வேல் யாத்திரை தமிழக பாஜக சார்பில் நடைபெற்றது, இந்த யாத்திரையின் போது திமுகவின் இந்து எதிர்ப்பு பற்றி தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்தனர் தமிழக பாஜகவினர், இந்நிலையில் திமுகவுக்கு எதிராக தமிழக இந்துக்கள் மத்தியில் பாஜக செய்து வரும் பிரசாரம் காரணமாக தான் தற்போது, திமுக தலைவர் முக ஸ்டாலின் கையில் இந்துக்கள் வழிபடும் வேலுடன் காட்சி தருவதாகவும், இது வரும் சட்டமன்ற தேர்தலுக்கான நாடகம் என பல்வேறும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .