உறுதியான திமுக பாஜக கூட்டணி… போட்டுடைத்த அனிதா ராதாகிருஷ்ணன்… வெளியான அறிவாலயம் ரகசியம்…

0
Follow on Google News

நடந்து முடித்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இரண்டு கம்யூனிஸ்ட்கள், இ எம் யூ, வைகோ என பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெக உடன் கூட்டணி அமைந்தது, பாஜக எதிர்ப்பு என்கிற ஒற்றை புள்ளியில் திமுக கூட்டணியில் தொடர்ந்து 9 வருடங்களாக இருந்த கட்சிகள் தற்பொழுது ஆட்சியில் பங்கு என்றதும் திமுகவுக்கு கல்தா கொடுத்துவிட்டு தவெக பக்கம் சென்று விட்டது.

கருணாநிதி மறைவுக்கு முன்பு அவர் உடன்நிலை சரியில்லாமல் கோபால புரம் வீட்டில் இருந்த பொது, 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி, அந்த காலகட்டத்தில் திமுக உடன் கூட்டணி அமைக்க பாஜக பல்வேறு வகையில் முயன்றது, இதற்க்கு மத்திய அமைச்சர் நிதின் கத்காரி மூலம் திமுக எம்பி கனிமொழியிடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியது டெல்லி பாஜக.

ஆனால் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட மனமில்லாமல், ராகுல்காந்தியை பிரதமராக்கியே தீருவேன் என ஒற்றை காலில் நின்ற முக ஸ்டாலின் பாஜக உடனான கூட்டணியை விரும்பவில்லை, மேலும் ஒரு எம்பி, ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட அப்போது இல்லாத விசிக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், வைகோ ஆகியோரையும் இணைந்து கொண்டு, பாஜக எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு அரசியலை மிக தீவிரமாக தமிழகம் முழுவதும் முன்னெடுத்தது திமுக.

திமுக என்கிற குதிரை மூலம் ஏறி சவாரி செய்த தமிழகத்தில் ஊருக்கு 4 பேர் கூட இல்லாத காங்கிரஸ் கட்சி, கடந்த 2019 நாடளுமன்ற தேர்தலில் 9 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது, மற்ற கூட்டணி கட்சிகளும் போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது, திருமாவளவனை வெற்றி பெற செய்து நாடாளுமன்றம் அனுப்பிய கட்சி திமுக.

அடுத்தடுத்து 2021 சட்டசபை தேர்தலில், 2024 நாடாளுமன்ற தேர்தல் என திமுக மீது குதிரை சவாரி செய்து திமுகவினரின் உழைப்பில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சிகள், 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த கணமே, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ஒவ்வொரு காட்சிகளாக தவெக உடன் கூட்டணி அமைத்து கொண்டு, திமுகவை கடுமையாக விமர்சனமும் செய்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து தற்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, அதுவும் ஆளும் தவெக அரசுக்கு எதிராக பாஜக உடன் கூட்டணி அமைத்து ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் திமுக தள்ளப்பட்டு இருக்கிறது, 2029 நாடளுமன்ற தேர்தலில் திமுக – பாஜக கூட்டணி அமையும் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் , அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைத்துள்ளது முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்னனின் பேச்சு.

திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், 6 மாத காலத்தில் தவெக ஆட்சி கவிழும். அடுத்த 6 மாத காலத்தில் தமிழ்நாட்டின்  முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார். திமுகவை உதயநிதி ஸ்டாலின் வழி நடத்துவார். திமுக எம்.பி. திருச்சி சிவா போன்றோர் எல்லாம் டெல்லியில் அமைச்சர்களாக அமருவார்கள் என பேசியுள்ளார்.

இதில் விரைவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் வர இருக்கும் நிலையில் திருச்சி சிவா மத்திய அமைச்சராக அமர்வார் என்று திருச்சி சிவா பேசியுள்ளது, கிட்டத்தட்ட திமுக – பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளதையே காட்டுகிறது என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here