பாமக IN .. விசிக OUT … தவெக கூட்டணியில் மாற்றம்… புதிய அமைச்சரவை லிஸ்ட் ரெடி…

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கூட்டணி கட்சிகள் துணை உடன் ஆட்சியை பிடித்தது, இதில் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்து அங்கீகரித்தார் முதல்வர் விஜய். ஆனால் கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகள் ஆளும் தவெக அரசுக்கு எந்த குடைச்சலும் கொடுக்காமல் இருக்க, விசிக தொடர்ந்து மறைமுகமாகவும் நேர்முகமாகவும் தவெக அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் முரண்பாடாக பேசி வருவது, தவெக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமாவளவனின் இந்த பேச்சுக்கு தவெக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் மற்றும் வைகோ போன்றவர்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பி வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் தவெக தரப்பில் இருந்து திருமாவளவன் பேச்சுக்கு எந்த ஒரு பதிலும் இல்லை.

இந்நிலையில் தவெக அமைதிக்கு பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விசிக்கவை கூட்டணியில் வைத்து கொண்டு 5 வருடம் ஆட்சியை நடத்த முடியாது என்பதை புரிந்து கொண்ட தவெக அரசு விசிக கூட்டணியில் இருந்தால் இருக்கட்டும் இல்லை என்றால் அவர்கள் வெளியேறட்டும் என்கிற முடிவுக்கு வந்து விட்டது. குறிப்பாக பட்டியல் சமூகத்தினர் வாக்குகளை கடந்த 2026 சட்டசபை தேர்தலில் அதிக அளவு அறுவடை செய்தது தவெக.

அந்த வகையில் பட்டியல் சமூகத்தின் வாக்கு வாங்கி தற்பொழுது தவெக பக்கம் உள்ளது. விசிக பக்கம் சொல்லும்படியாக ஓட்டு வங்கி இல்லை. மேலும் தவெக அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது தவெக அரசு. அந்த வகையில் விசிகவை தவெக கூட்டணியில் இருந்து வெளியேற்றுவதால் அல்லது வெளியேறுவதால் தவெக வுக்கு பட்டியல் சமூக வாக்குகளில் எந்த பாதிப்பும் இல்லை.

இதனை தொடர்ந்து விசிக்கவை வெளியேற்றிவிட்டு பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு திட்டமிட்டிருக்கிறது தவெக. அதன் தொடக்கம் தான் சமீபத்தில் மேகதாது அணை தொடர்பாக அமைச்சர் புஸ்சி ஆனந்த் மற்றும் அமைச்சர் அதாவ அர்ஜுனாவை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சௌம்யா அம்புமணி ஆகியோர் சந்தித்தது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

குறிப்பாக மேகதாது அணை தொடர்பாக சந்திப்பாக இது இருந்தாலும் கூட்டணிக்கு அச்சாரம் தான் என்றும், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றதிற்காக இடைதேர்தல் முடிந்ததும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடைபெற்ற இருக்கிறது, அதில் அதிமுகவில் இருந்து விலகி வந்த சிலர் அமைச்சரவையில் இடம் பெறலாம், அதே போன்று பாமக சார்பில் சௌம்யா அன்புமணி அமைச்சரவையில் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

தவெகவின் இந்த அரசியல் நகர்வுகள் விசிக தரப்புக்கு சற்று அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவே தகவல் வெளியாகி உள்ளது, வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற விசிக தரப்புக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்தது தவெக, ஆனால் திருச்சி இடைதேர்தலில் திருமாவளவன் போட்டியிட்டு துணை முதல்வராக வேண்டும் என்றெல்லாம் விசிக தரப்பு பேசியது தவெக தலைமையை கோபம் அடைய செய்து இருக்கிறது என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது மீண்டும் திமுக பக்கம் சென்றால் விசிக வுக்கு அங்கே தகுந்த வரவேற்பு கிடைக்காது, அதே நேரத்தில் தொடர்ந்து தவெக கூட்டணியில் அங்கம் வகித்திருக்கும் மற்ற கட்சி தலைவர்கள் தொடர்ந்து விசிகாவை விமர்சனம் செய்து வரும் நிலையில் முரண்பாடுகளுடம் கூட்டணியில் தொடர்ந்தாலும் சரி இருக்காது என்பதால் விசிகவின் நிலை மிக பரிதாபத்தில் இருந்து வருகிறது குறிப்பிடதக்கது.