80 சீட் ஆட்சியில் பங்கு… நேரடியாக ராகுல் காந்தி வெச்ச டிமாண்ட்… ஷாக் ஆன முக ஸ்டாலின்…

0
Follow on Google News

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்த கிரிஷ் சோடாக்கர் தலமையில் 5 பேர் கொண்ட குழுவை காங்கிஸ் தலைமை அறிவித்துள்ளது. இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சூரஜ், எம்.என்.ஹெக்டே, நிவேதிக் ஆல்வா, ராஜேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலினை திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, அதற்கு முன்பு கடந்த 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 45 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது, அதற்கு முன்பு 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 61 தொகுதிகள் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, இந்நிலையில் 61 தொகுதிகள் பெற்று போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் வெறும் 25 தொகுதிகள் மட்டுமே திமுக ஒதுக்கியது.

அதுவும் அழுது கதறி காங்கிரஸ் கட்சி பெற்றது. இப்படியே போனால் அடுத்து 2026 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 15 தொகுதிகள் தான் திமுக ஒதுக்கும் என்கிற தகவலும் வெளியானது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 5 வர் குழுவின் நோக்கமே, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி அதிக தொகுதிகளை பெறுவது தான். இதனை தொடர்ந்து சமீபத்தில் முக ஸ்டாலினை சந்தித்த 5 வர் குழு முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் குறித்து பேசியது.

அப்போது கிரிஷ் சோடாக்கர் , தனியாக ஒன் டு ஒன் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து பேச வேண்டும் என தெரிவிக்க, உடனே இருவர் மட்டும் ஒன் டு ஒன் பேசி இருக்கிறார்கள். குறிப்பாக கிரிஷ் சோடாக்கர் காங்கிரஸ் கட்சியில் மிக முக்கியமான நபர், ராகுல்காந்திக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர், அந்த வகையில் ராகுல் காந்தியின் குரலாகவே முதல்வர் முக ஸ்டாலினிடம் ஒன் டு ஒன் பேசி இருக்கிறார் கிரிஷ் சோடாக்கர்.

இதனை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை 5 வர் குழுவில் இடம் பெற்ற அனைவரும் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து சில நிமிடம் பேசி இருக்கிறார்கள். இந்நிலையில் உள்ளே காங்கிரஸ் 5 வர் குழு என்ன பேசியது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதில் வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 80 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த முறை 25 தொகுதி கொடுத்ததே காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்தது பெரிய விஷயம், பாஜக வளர்ந்த அளவுக்கு கூட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வளர்ச்சி இல்லை, காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இல்லை என்றாலும் பறவையில்லை, தேர்தலில் தோல்வியை தழுவி எதிர்க்கட்சி வரிசையில் அமர கூட தயார், ஆட்சியில் பங்கு கொடுத்து கூட்டாட்சி என்கிற பேச்சுக்கே இடமில்லை என்பதில் முதல்வர் முக ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்குள் தேமுதிக , டி டி வி தினகரன் அகியோரை உள்ளே கொண்டு வருவதற்கு முயற்சிகளை செய்து வரும் திமுக காங்கிரஸ் கட்சியை கழட்டி விடுவதில் உறுதியாக இருப்பதாகவும், 15 தொகுதி தான் இஷ்டம் இருந்தால் இருக்கட்டும் இல்லை என்றால் வெளியேறட்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதால், குறிப்பாக காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட வேண்டும் என்பதர்க்காகவே 15 சீட் தான் என திமுக காரர் காட்ட இருக்கும் தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சி, த வெ க பக்கமும் கூட்டணி குறித்து திரைமறைவில் காங்கிரஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.