சொந்த ஊரிலே வெறும் 9 ஓட்டுகள் மட்டும் வாங்கி 2014 தேர்தலில் டெபாசிட் இழந்த ஜோதிமணிக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி சார்பில் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் கரூர் நாடாளுமன்ற தேர்தலில் ஜோதிமணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் செந்தில் பாலாஜி. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு கரூர் மாவட்ட அரசியல் களத்தில் ஜோதிமணியும் செந்தில்பாலாஜியும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பின்பு, திமுக மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் என்கிற முறையில் கரூர் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில் செந்திபாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தன்னை விட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால், சில முக்கிய நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஜோதிமணி புறக்கணித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் செந்தில் பாலாஜி – ஜோதிமணி விவகாரம் வீதிக்கு வந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து ,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டதை துவங்கியுள்ளாதாகவும் தெரிவித்த ஜோதிமணி தொடர்ந்து இரண்டு நாட்கள் தனது போராட்டத்தை நடத்தியவர் பின் உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது என தெரிவித்திருந்தார் ஜோதிமணி.
ஆனால் இதற்கு செந்தில் பாலாஜி, ஒரு சிலர் தங்கள் இருப்பதை காட்டிக் கொள்வதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். செய்தித்தாள்கள் தொலைக்காட்சிகளில் தாங்கள் இருப்பதைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் அப்படி செய்கின்றனர்” என அப்போது அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மறைமுகமாகவே ஜோதிமணிக்கு பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் தொடர்ந்து திமுகவினருக்கு ஜோதிமணி எம்பிக்கும் தொடர்ந்து உரசல் இருந்து வரும் நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் குறித்த கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக அலுவகத்தில் நடந்த போது, இதில் ஜோதிமணி மற்றும் திமுகவினர் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஜோதிமணியை வெளியே போ என திமுகவினர் ஆக்ரோஷமாக பேச,
திமுக அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த ஜோதிமணி கூச்சலிட்டு, உன் வீட்டுக்கு விருந்துக்கா வந்திருக்கேன், வெளியே போலாம் என்று எப்படி சொல்லலாம். மரியாதை இல்லாமல் எப்படி பேசலாம், அதே மாதிரி நான் பேசுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என வீதியில் நின்று திமுகவினரை பார்த்து ஜோதிமணி கூச்சலிட்டார். அப்போது மீடியா இருக்கு என ஒருவர் ஜோதிமணியிடம் தெரிவிக்க.
அதற்கு மீடியா இருந்தால் என்ன.? இவர் என்ன வேண்டுமானாலும் பேசுவாரா என ஜோதிமணி சத்தமிட அங்கே இருந்த ஒருவர் ஜோதிமணி எம்பி கையை பிடித்து சமாதானம் செய்து இழுத்து சென்றார். இப்படி ஜோதிமணிக்கு – செந்தில் பாலாஜிக்கு இடையில் இருந்த மோதல், சில காலம் சற்று அடங்கி இருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் தற்பொழுது செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்டையை சுழற்றி இருக்கிறார் ஜோதிமணி.
இதற்கு பின்னணி தகவலும் வெளியாகி இருக்கிறது. அதாவது விஜயின் தவெக உடன் காங்கிரஸ் மேலிடம் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், திமுகவை விட்டு வெளியேற ஜோதிமணி மூலம் திமுகவுக்கு எதிராக ராகுல் காந்தி ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது.

