சமீபத்தில் நெல்லையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வரும் தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் உள்ள 234 தொகுதியில் பாதிக்கு பாதியாக சுமார் 117 தொகுதிகள் வேண்டும்’ என்று வெளிப்படையாக பேசியதாக கூறப்படுகிறது, அதேபோல் காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமார், ‘திமுக வெற்றி பெற்றால் எங்களுக்கு ஆட்சியில் பங்கு வேண்டும்’ என்றே தெரிவித்து இருக்கிறார்.
மேலும் முன்னாள் தலைவர் கே.எஸ். அழகிரியும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். இதன் மூலம் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் பிளவு ஏற்பட்டு விட்டது என்பதை உறுதி படுத்துகிறது. இந்த நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை சமீபத்தில் தமிழக தேர்தல் அரசியல் கள நிலவரம் குறித்து ஒரு தனியார் நிறுவனத்திடம் கருத்துக் கணிப்புகளை எடுக்க செய்து அதன் ரிப்போர்ட்களை பெற்றிருக்கிறது.

அதில் காங்கிரஸ் – விஜய் இருவரும் கூட்டணி அமைத்து, மேலும் இதர கட்சிகள் இணையும் பொழுது தமிழகத்தில் விஜய்யுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்கின்ற என்கின்ற ரிப்போர்ட் டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு சென்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து விஜயுடன் வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பதற்கு ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவருமே பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும் கடந்த 2006 முதல் 2011 வரை மைனாரிட்டி ஆட்சியாக இருந்த திமுக காங்கிரஸ் துணையுடன் ஆட்சி அமைத்தாலும், ஆட்சியிலும் அதிகாரத்திலும் காங்கிரசுக்கு பங்கு கொடுக்கவில்லை. ஆனால் அது போன்று இனி ஏமார்ந்து விட கூடாது, வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சி தயவு இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது என்கின்ற சூழல் தற்பொழுது உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் திமுகவுடன் அதிக தொகுதிகளை பெற்று போட்டியிட்டால் மட்டுமே ஆட்சியில் பங்கு கொள்ள முடியும், வழக்கம்போல் திமுக கொடுக்கும் தொகுதியில் போட்டியிட்டால் அது கதைக்கு ஆகாது எனது முடிவு செய்துள்ளது காங்கிரஸ் கட்சி. விஜய்யுடன் கூட்டணி அமைத்து குறைந்தது 80 முதல் 90 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு வரும் தேர்தலில், இந்த கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொள்ளலாம் என்கின்ற உற்சாகத்தில் தற்பொழுது தாவேக்காவுடன் கூட்டணி அமைப்பதை உறுதி செய்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.
அந்த வகையில் விஜயை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவும் காங்கிரஸ் ஒப்பு கொண்டு விட்டதாகவும், இதனை தொடர்ந்து விரைவில் விஜய் ராகுல் காந்தி இருவரும் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அதனை தொடர்ந்து விஜய் – சோனியா காந்தி சந்திப்பு, விஜய் – பிரியங்கா காந்தி சந்திப்பு என அடுத்தடுத்து அரசியலில் பல நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் காங்கிரஸ், திமுக கூட்டணியை விட்டு வெளியேறினால் அடுத்தடுத்து விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் வெளியேறும் என்றும், அந்த வகையில் வெளியேறி தாவெக்காவில் இணையும் என எதிர்பார்க்க படுகிறது. இப்படி ஒரு சூழலில் திமுகவின் கூடாரம் காலியாகும் பட்சத்தில் வரும் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட திமுகவால் தக்க வைக்க முடியாது என்கிறது அரசியல் கள நிலவரம்.

