எடப்பாடியாரே ..! நீங்க தான் காப்பாற்றணும்… முடிந்தது திமுக ஆட்சி… ஓன்று கூடிய தமிழக மக்கள்…

0
Follow on Google News

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் பரப்புரையை மேற்கொன்டு வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மக்களோடு மக்களாக பேசி கலந்துரையாடினார், அங்கே குடிசை தொழிலாக சாக்லேட் தயாரிக்கும் தொழிலாளர்கள் எடப்பாடி பழனிசாமி உடன் கலந்துரையாடினார்கள்.

அப்போது அந்த சாக்லேட் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார்,தினமும் 5 முதல் 10 கிலோ சாக்லேட் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் தயாரிப்பதாக தெரிவித்த அந்த மக்கள், மொத்தம் சேர்ந்து ஒரு நாளைக்கு 3 ஆயிரம் கிலோ சாக்லேட் தயாரிக்கிறோம், இங்கே வரும் டூரிஸ்ட் பயணிகளை நம்பியே எங்கள் தொழில் உள்ளது தற்பொழுது, ஈ பாஸ் நடைமுறையில் உள்ளதால், எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அந்த மக்கள்.

நீங்கள் ஆட்சிக்கு வந்தது எந்த ஈ பாஸ் முறையை ரத்து செய்யவேண்டும் என தெரிவித்தார்கள், அதற்கு இந்த ஈ பாஸ் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், ஆட்சிக்கு வந்த பின்பு சட்டப்படி அதை சரி செய்வோம் என உறுதி கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும் சாக்லேட் க்கு 18 சதவிகிதம் இருந்த ஜி எஸ் டி தற்பொழுது 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு எடப்பாடி பழனிச்சாமி ஐயா மூலமாக மத்திய மோடி அரசுக்கு நன்றி சொல்கிறோம் என தெரிவித்த அந்த சாக்லேட் தொழிலாளிகளிடம், பணம் கொடுத்து சாக்லேட் வாங்கி மக்களோடு மக்களாக சாப்பிட்டு ருசித்து பார்த்தார் எடப்பாடி பழனி சாமி.

இதனை தொடர்ந்து தேயிலை தோட்ட தொழிலாளிகளை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம், ஐயா எனக் வாழ்வாதாரமே இந்த ஆட்சியில் ரெம்ப மோசமா இருக்கு, ஜெயலலிதா அம்மா இருக்கும் போது, எங்களுக்கு மானியம் இருந்தது, நீங்க தான் திரும்ப ஆட்சிக்கு வருவீங்க, ஆட்சிக்கு வந்த எங்களுக்கு மானியம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இப்படி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் கொடுக்கும் பேராதரவு, மேலும் திமுக ஆட்சியினால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிப்பது, திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் ஒன்று கூடி விட்டார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

error: Content is protected !!