திமுக கூட்டணியை உடைக்க சசிகலா.! பாஜக கூட்டணியை வலுப்படுத்த ரஜினி.! அமித்ஷா அதிரடி…

0
Follow on Google News

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அதிரடி அரசியல் மாற்றங்கங்கள் 2021 ஜனவரியில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்க படுகிறது, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக தேசிய தலைவராக இருந்த அமித்ஷா மற்ற மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தியவர், தமிழகத்தை மட்டும் கண்டுகொள்ளவில்லை இதன் எதிரொலியாக அதிமுக கூட்டணி போட்டியிட்ட தேனி நாடாளுமன்ற தொகுதியை தவிர்த்து மற்ற அணைத்து தொகுதியிலும் தோல்வியை தழுவியது.

இதற்கு காரணம் அமித்ஷாவின் அரசியல் வியூகத்துக்கு அதிமுக உடன்படவில்லை என்றே கூற படுகிறது.அதனாலே அமித்ஷா கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தை கண்டுகொள்ள வில்லை, இந்நிலையில் அமித்ஷா பாஜகவின் தேசிய தலைவராக இருந்த போது தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க அவர் வகுத்த அரசியல் வியூகங்கள் இன்னும் முழுமை அடையாததால், புதிய பாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா பொறுப்பேற்று கொண்டாலும், தமிழ்நாடும் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தற்போது வரை அமித்ஷாவின் தீவிர பார்வையில் தான் உள்ளது.

இந்நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவை சீர்குலைக்கவும் அதே நேரத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தவும் பலவேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளது, திமுகவின் பலம் அதன் கூட்டணி கட்சிகள், ஆனால் அதன் கூட்டணி கட்சிகள் திமுக மீது அதிருப்தியில் இருந்தால் பாஜக இருக்கும் கூட்டணிக்கு செல்ல மனம் இல்லாமல் வேறு வழியின்றி திமுக கூட்டணியில் தொடர்கின்றனர், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் திமுக தலைமையின் மீது கோவத்தில் தான் இருந்து வந்தனர்.

இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை வெளியில் வரவழைத்து சசிகலா தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது, அதே நேரத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கியில் ரஜினிகாந்த் ஆதரவு இருக்கும் என்றும் மேலும் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கவில்லை என்றாலும் வரும் சட்டமன்ற தேர்தலின் போது 1996 தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை அவர் உருவாக்கியது போன்று தற்போது திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பார் என கூறப்படுகிறது, இதன் பின்னணியில் மத்திய உள்த்துறை அமித்ஷா செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.