வேல் யாத்திரை நடத்தி ரத்தக் களரியை ஏற்படுத்த தூபம் போட்டு வருகிறது பாஜக.! கே.எஸ்.அழகிரி ஆவேசம்..!

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் வருகின்ற நவம்பர் 6 தேதி முதல் அடுத்த மாதம் டிசம்பர் 6 தேதி வரை முழுவதும் வெற்றிவேல் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளார், கடந்த காலங்களில் பாஜக மூத்த தலைவர் அத்வனி நாடு முளுவதும் நடத்திய ரதயாத்திரை மிக பெரிய மாற்றத்தை உருவாக்கி மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க வலி செய்தது, அந்த வகையில் தமிழக்தில் பாஜக சார்பில் நடைபெற இருக்கும் வெற்றி வேல் யாத்திரை மாற்றத்தை உருவாக்கும் என தமிழக பாஜகவினர் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக நடத்தும் வெற்றி வேல் யாத்திரைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த காலங்களில் மகாத்மா காந்தியடிகளின் கையில் ராமர் இருந்தவரை அவர் பாதுகாப்பாக இருந்தார். அத்வானி கைக்கு இராம பிரான் மாறிய பிறகு நாடு முழுவதும் ரத்தக்களரி ஏற்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கிற நிலை ஏற்பட்டது.

அதேபோல, கிருபானந்த வாரியார் பிரச்சாரத்தில் முருக வழிபாட்டின் மூலம் தமிழகத்தில் பக்தர்கள் பெருகி மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், முருகன் பெயரை வைத்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர், வேல் யாத்திரை நடத்தி தமிழகத்தில் ரத்தக் களரியை ஏற்படுத்த தூபம் போட்டு வருகிறார். கடந்த காலத்தில் சூலாயுதத்தினால் ஏற்பட்ட விளைவுகளைப் போல, வேல் யாத்திரை மூலம் சமூக அமைதியைச் சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேட தமிழக பா.ஜ.க. முயற்சி செய்கிறது.

இந்த முயற்சிகளை ஜனநாயக, மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கையுள்ள சக்திகள் முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். என தெரிவித்த கே.எஸ்.அழகிரி பாஜக நடத்தும் வெற்றி வேல் யாத்திரைக்கு போட்டியாக தமிழக காங்கிரஸ் சார்பில் ஏர்கலப்பை ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளார், இது குறித்து அவர் கூறுகையில்,தமிழகம் முழுவதும் நடைபெறும் ஏர் கலப்பை ஊர்வலங்களின் இறுதியில் மாநில அளவில் நடைபெறும் விவசாயிகளின் பேரணியில் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்க இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் ராகுல்காந்தி பங்கேற்கிற விவசாயிகள் பேரணி தமிழகத்தின் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் முழுவதும் எந்த தேதியில் ஏர் கலப்பை ஊர்வலம் தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும். என தெரிவித்துள்ளார்.