ஒவ்வொரு அமைசராக போன் செய்து கதறும் சசிகலா.!டார்ச்சர் தாங்க முடியாமல் நம்பரை பிளாக் செய்த அமைச்சர்கள்.!

0
Follow on Google News

ஊழல் குற்றச்சாட்டில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திருப்பி உள்ளார். சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, சசிகலா குடும்பத்தை ஓரம் கட்டிவிட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து அதிமுக கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்தி வருகின்றனர். ஆளுமை இல்லாத தலைவர்களால் விரைவில் ஆட்சி கவிழ்க்கப்படும் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்த நிலையில் ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சியை வழிநடத்தி ஆளுமைமிக்க தலைவராக உருவெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில் சசிகலா சிறைக்கு சென்றதும், சில சட்டமன்ற உறுப்பினரக்ள் TTV தினகரனின் ஆசை வார்த்தைகளை நம்பி அவருக்கு ஆதரவாக இருந்தனர், ஆனால் இறுதியில் அவர்கள் சட்டமன்ற பதவி உட்பட அனைத்தையும் இழந்து நடு ரோட்டில் நின்றது தான் மிச்சம். இதனை தொடர்ந்து TTV தினகரன் திட்டமிட்டு தங்களை ஏமாற்றப்பட்டு வருவதையும், சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் நடைபெறாது என்பதை உணர்த்த TTV தினகரன் பக்கம் இருந்த, செந்தில் பாலாஜி, தங்க தமிழ்செல்வன், புகழேந்தி ஆகியோர் தினகரனிடம் இருந்து விலகி அதிமுக, திமுக போன்ற கட்சியில் இணைத்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் TTV தினகரன் வெற்றி பெற்றால் மாற்றம் வரும் என எதிர்பார்த்த காத்திருந்தவர்கள், பின்பு சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த உடன் அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், என அனைவரும் சசிகலா பக்கம் வந்து விடுவார்கள், அதிமுகவை சசிகலா கைப்பற்றி விடுவார் என எதிர்ப்பார்த்த TTV தினகரன் நடத்தும் அமமுக கட்சி நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்நிலையில் சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆனதும், அவர் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வந்த அன்று, அமமுக நிர்வாகிகள் மற்றும் சில ஊடகங்கள், ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வருகிறார், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா செல்ல போகிறார், அதிமுக கொடி உள்ள மற்றறொரு அதிமுக நிர்வாகிகள் காரில் சசிகலா செல்கிறார் என பரபரப்பை ஏற்படுத்த முயற்சி செய்தனர், ஆனால் ஒரே நாளில் அந்த பரபரப்பு அடங்கி, அடுத்த நாள் சசிகலா எங்கே இருக்கிறார் என்று கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தன்னை உடல்நலம் விசாரிக்க வருவார்கள் என எதிர்பார்த்த சசிகலாவை யாரும் கண்டு கொள்ளவில்லை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் யாரும் தன்னை கண்டு கொள்ளாத நிலையில், சில முக்கிய அதிமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோரை சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் சசிகலா, நான் தான் சின்னமா பேசுகிறேன் என அவரது குரலை கேட்டதும் ஒரு சிலர் தொலைபேசியை துண்டித்துள்ளனர், மேலும் சிலர் மரியாதை நிமித்தமாக உடல்நலம் விசாரித்துள்ளனர், அப்படி விசாரித்தவர்களிடம் அரசியல் பேசிய சசிகலாவிடம் வெளிப்படையாகவே அரசியல் பேச வேண்டாம் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர், ஆனால் தொடர்ந்து சசிகலா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டார்ச்சர் கொடுப்பதை தாங்கி கொள்ள முடியாமல் சசிகலா தொலைபேசி என்னை பிளாக் செய்துவிட்டதாக கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .