விஜய்க்கு வந்த ராகுல்காந்தி போன் கால் … திமுகவை காலி செய்யாமல் விடமாட்டேன்… விஜய் எடுத்த சபதம்…

0
Follow on Google News

சமீபத்தில் கரூரில் நடந்த தமிழக வெற்றி கழக நிகழ்வில் நடந்த துயர சம்பவத்துக்கு பின்பு, ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடும் கோபத்தில் இருந்து வருகிறார் விஜய். என்னை பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்க, நான் வீட்டில் தான் இருப்பேன், என்னுடைய அலுவலகத்தில் தான் இருப்பேன், என்னுடைய தொண்டர்கள் மேல் கை வைக்க வேண்டாம் என நேரடியாகவே முதல்வர் முக ஸ்டாலினுக்கு கரூர் துயர சம்பவத்துக்கு பின்பு எச்சரிக்கை கலந்த சவால் விடுத்து இருந்தார் விஜய்.

இந்நிலையில் ஏற்கனவே விஜய்க்கு பாஜக தரப்பில் இருந்து கூட்டணிக்கு ஆந்திர துணை முதல்வரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, ஆனால் காங்கிரஸ் கூட்டணிக்கு வர விஜய்யுடன் காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதால், பாஜக கூட்டணியை தவிர்த்து வருகிறார் விஜய். இந்நிலையில் சமீபத்தில் நடந்த கரூர் துயர சம்பவத்துக்கு விஜயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் ராகுல் காந்தி.

அப்போது, நடிகர் விஜய் கரூரில் நடந்த நிகழ்வுக்கு ஆளும் திமுக அரசு தான் காரணம், என்பதை பட்டியலிட்டு இருக்கிறார். இது தன்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக இதெல்லாம் அரங்கேறி இருக்கிறது என்றெல்லாம் ராகுல் காந்தியிடம் பேசிய விஜய், வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுகவை துடைத்து எரியாமல் விடமாட்டேன் என சபதம் ஏற்ற விஜய், மறைமுகமாக திமுக கூட்டணியில் இருந்து நீங்கள் வெளியேறி எங்களுடன் கூட்டணி அமைக்க வில்லை என்றால், பாஜக உடன் கூட்டணி அமைப்போம், எங்களுக்கு வரும் 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ராகுல் காந்தியிடம் விஜய் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே சி வேணுகோபாலிடம் தமிழக நிலவரம் குறித்தும், விஜய் உடன் தொலைபேசியில் பேசியது குறித்து ஆலோசனை நடந்தி இருக்கிறார் ராகுல் காந்தி. அதற்கு விஜய் பாஜக – அதிமுக கூட்டணியில் இணைந்தால் திமுக கூட்டணி தோல்வியை தழுவும், மேலும் வரும் கேரளா சட்டசபை தேர்தலில் விஜய் மற்றும் பாஜக கூட்டணிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான போட்டியாக மாறும், அங்கே காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுவோம், என ராகுல் காந்தியிடம் தெரிவித்த கே சி வேணுகோபால்.

இதுவே விஜய் உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், வரும் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணிக்கு ஆட்சிக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் கேரளாவில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அடுத்து வரும் கேரளா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்து விடலாம் என கே சி வேணுகோபால் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தி இருக்கிறார். இதனை தொடர்ந்து கே சி வேணுகோபால் மூலம் விஜய் நினைத்தது நடக்கும் அதற்கு காங்கிரஸ் பக்க பலமாக இருக்கும் என விஜய்க்கு ராகுல்காந்தியிடம் இருந்து தகவல் தெரியப்படுத்த பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு குறிப்பிட்ட கால கெடு விஜய் விதித்துள்ளதாகவும் , அதற்கு காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரவில்லை என்றால் பாஜக – அதிமுக உடன் விஜய் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் தற்பொழுது திமுக தவித்து எந்த ஒரு அரசியல் கட்சியையும் விமர்சனம் செய்ய வேண்டாம், குறிப்பாக பாஜகவை விமர்சனம் செய்ய வேண்டாம் என தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.